October 2 Rasipalan: புரட்டாசி மாதம் 15ஆம் நாளான இன்று (அக்டோபர் 2), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
October 2, Today Horoscope: இன்று புரட்டாசி 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை (அக்டோப்ர 2) பரபாவ வருடம்.
1/13
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
2/13
மேஷம்
விவசாய பணிகளில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனை செயல்களில் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவேகம் வேண்டும். தொழில் செயல்பாடுகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
3/13
ரிஷபம்
பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : குழப்பங்கள் மறையும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
4/13
மிதுனம்
பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் பிறக்கும். வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். கலைத் துறைகளில் புதுமையான சூழல் உண்டாகும். வழக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்களும் மன அமைதியின்மையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் பிறக்கும்.
திருவாதிரை : புதுமையான நாள்.
புனர்பூசம் : அமைதியின்மையான நாள்.
5/13
கடகம்
செய்கின்ற முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இன்சூரன்ஸ் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்துவீர்கள். தொழில் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
புனர்பூசம் : வெற்றி கிடைக்கும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
6/13
சிம்மம்
தோற்றப்பொலிவு தொடர்பான விஷயங்களில் சிறுசிறு மாற்றங்களை செய்வீர்கள். உலகியல் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்களும் சிறு சஞ்சலங்களும் உருவாகும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த சில உதவிகள் அலைச்சல்கள் பின்பு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தீர்வும் வெற்றியும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : மாற்றமான நாள்.
பூரம் : சஞ்சலங்கள் பிறக்கும்.
உத்திரம் : தீர்வுகள் கிடைக்கும்.
7/13
கன்னி
பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : தேடல்கள் உண்டாகும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
8/13
துலாம்
விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வர்த்தக தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.
9/13
விருச்சிகம்
சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். சிற்றின்ப செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கங்கள் அதிகரிக்கும். மலர்கள் வியாபாரத்தில் லாபங்கள் உருவாகும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : நெருக்கங்கள் அதிகரிக்கும்.
கேட்டை : ஆதரவான நாள்.
10/13
தனுசு
மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் இருந்த பொறுப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : லாபங்கள் உண்டாகும்.
உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.
11/13
மகரம்
விளையாட்டுத் துறைகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை துறைகளில் ரசனைத்திறன் மாற்றமடையும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சாதுர்யமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கிக் கொள்வீர்கள். சாஸ்திரம் தொடர்பான குழப்பங்கள் நீங்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.
12/13
கும்பம்
உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதுவிதமான சிந்தனைகளால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : இழுபறிகள் மறையும்.
பூரட்டாதி : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.
13/13
மீனம்
மறைமுக எதிர்ப்புகளைப் புரிந்துகொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில்நுட்பம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். நினைத்த எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : தேடல்கள் அதிகரிக்கும்.
ரேவதி : புரிதல் மேம்படும்.