• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அக்டோபர் 3 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு பண வர அதிகரிக்கும்?

அக்டோபர் 3 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு பண வர அதிகரிக்கும்?

Written BySudharsan G
Published: Oct 03, 2026, 06:01 AM IST|Updated: Oct 03, 2026, 06:13 AM IST
joinshare
October 3 Rasipalan: புரட்டாசி மாதம் 16ஆம் நாளான இன்று (அக்டோபர் 3), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம்.

October 3, Today Horoscope: இன்று புரட்டாசி 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) பரபாவ வருடம்.

October 3 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
October 3 Rasipalan2/13

மேஷம்

இழுபறியான தன வரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகையால் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அஸ்வினி : வரவுகள் கிடைக்கும். பரணி : மகிழ்ச்சியான நாள். கிருத்திகை : மாற்றமான நாள்.
October 3 Rasipalan3/13

ரிஷபம்

திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் கிருத்திகை : வரவுகள் உண்டாகும். ரோகிணி : செலவுகள் ஏற்படும். மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.
October 3 Rasipalan4/13

மிதுனம்

அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில முயற்சிகள் காலதாமதமாக நிறைவேறும். கற்கும் திறன்களில் மாற்றங்கள் உருவாகும். தனவரவு மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் மனதில் உருவாகும். மருத்துவ பணிகளில் இருப்பவர்களுக்கு வரவுகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் மிருகசீரிஷம் : குழப்பங்கள் நீங்கும். திருவாதிரை : மாற்றங்கள் உருவாகும். புனர்பூசம் : வரவுகள் மேம்படும்.
October 3 Rasipalan5/13

கடகம்

எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும். தம்பதிகளிடம் அனுசரித்துச் செல்லவும். ரகசியமான சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் அமைதியின்மையும் ஒருவிதமான போராட்டமும் உருவாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் புனர்பூசம் : நெருக்கடியான நாள். பூசம் : பயணங்கள் மேம்படும். ஆயில்யம் : அமைதியின்மையான நாள்.
October 3 Rasipalan6/13

சிம்மம்

கலை நுட்பமான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். செய்தொழிலில் மேன்மையும் பாராட்டையும் பெறுவீர்கள். பூமி விருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும். மறுதாரம் தொடர்பான விஷயங்களில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத பொறுப்புகள் மூலம் மதிப்புகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : ஈடுபாடு உண்டாகும். பூரம் : சிந்தனைகள் மேம்படும். உத்திரம் : மதிப்புகள் மேம்படும்.
October 3 Rasipalan7/13

கன்னி

முன்கோபம் இன்றி எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுக்கேற்ற செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான சிறு தூரப் பயணங்கள் செல்வீர்கள். சமூக தொடர்பான பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எழுத்து துறைகளில் சில சாதகமற்ற சூழல் உண்டாகும். அதிஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம் உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும். அஸ்தம் : செலவுகள் ஏற்படும். சித்திரை : சாதகமற்ற நாள்.
October 3 Rasipalan8/13

துலாம்

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடை விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் வேண்டும். பயனற்ற சிந்தனைகளைத் தவிர்ப்பதன் மூலம் மன அமைதி ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். சுவாதி : கவனம் வேண்டும். விசாகம் : அமைதியான நாள்.
October 3 Rasipalan9/13

விருச்சிகம்

தன வரவில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம் விசாகம் : ஏற்ற இறக்கமான நாள். அனுஷம் : சிந்தித்து செயல்படவும். கேட்டை : பொறுமை வேண்டும்.
October 3 Rasipalan10/13

தனுசு

உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கலகலப்பான சூழல் அமையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம் மூலம் : வாய்ப்புகள் கைகூடும். பூராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
October 3 Rasipalan11/13

மகரம்

சந்தேக உணர்வுகள் எதுவும் இன்றி தீரவிசாரித்து முடிவுகளை எடுப்பீர்கள். பங்காளிகள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் அவசியமாகும். உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் விருப்பங்கள் உருவாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் உத்திராடம் : முடிவுகளில் கவனம். திருவோணம் : விவேகம் வேண்டும். அவிட்டம் : விருப்பங்கள் பிறக்கும்.
October 3 Rasipalan12/13

கும்பம்

குழந்தைகளிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனை திறனில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் அவிட்டம் : வேறுபாடுகள் குறையும். சதயம் : ஆர்வம் அதிகரிக்கும். பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.
October 3 Rasipalan13/13

மீனம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைக்கூடுவதற்கான சூழல்கள் அமையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
பல்டி பாமா... சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு - அமைச்சர்கள் கண்டனம்

பல்டி பாமா... சர்ச்சையை கிளப்பிய ஸ்டாலின் பேச்சு - அமைச்சர்கள் கண்டனம்

2

ரோகித்தின் அதிரடி சதம்.. இப்போது வருத்தப்படும் அகர்கர்! போட்டு உடைத்த சடகோபன் ரமேஷ்!

3

ரிங்கில் மிரட்டிய இந்தியர்.. சுபாஷ் சந்திரா அறக்கட்டளை மாணவர் அங்குஷ் பங்கால் தங்கம் வென்று அசத்தல்!

4

வெற்றி பயண திட்டம்: எந்தெந்த பேருந்துகளில் கட்டணம் செலுத்த வேண்டும்? வேண்டாம்? - Explained

5

சிக்மா ரிலீஸ் : இயக்கமா-நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் நச் பதில்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.