• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அக்டோபர் 4 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?

அக்டோபர் 4 ராசிபலன் : இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?

Written BySudharsan G
Published: Oct 04, 2026, 06:13 AM IST|Updated: Oct 04, 2026, 06:23 AM IST
joinshare
October 4 Rasipalan: புரட்டாசி மாதம் 17ஆம் நாளான இன்று (அக்டோபர் 4), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

October 4, Today Horoscope: இன்று புரட்டாசி 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) பரபாவ வருடம்.

 

October 4 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
October 4 Rasipalan2/13

மேஷம்

இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும். பரணி : உதவிகள் கிடைக்கும். கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.
October 4 Rasipalan3/13

ரிஷபம்

நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவார்கள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் விலகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்களின் நட்பால் நன்மை ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும். ரோகிணி : பிரச்சனைகள் விலகும். மிருகசீரிஷம் : வரவுகள் மேம்படும்.
October 4 Rasipalan4/13

மிதுனம்

விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் சிறுசிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். கணவன்-மனைவியிடையே அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மிருகசீரிஷம் : தாமதங்கள் உருவாகும். திருவாதிரை : அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
October 4 Rasipalan5/13

கடகம்

உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். மனம் மகிழும்படியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபாரப் பணிகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். கருத்துக்களை வெளிப்படுத்தும்போது சிந்தித்து செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் புனர்பூசம் : மாற்றமான நாள். பூசம் : மேன்மை உண்டாகும். ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
October 4 Rasipalan6/13

சிம்மம்

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுப காரியங்களில் இருந்த பிரச்சனைகள் விலகும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகி செல்வார்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : அனுகூலம் உண்டாகும். பூரம் : பிரச்சனைகள் விலகும். உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
October 4 Rasipalan7/13

கன்னி

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் தன உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயமான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம் உத்திரம் : ஆதரவான நாள். அஸ்தம் : மதிப்பு அதிகரிக்கும். சித்திரை : ஆதாயமான நாள்.
October 4 Rasipalan8/13

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் விவாதங்கள் தோன்றி மறையும். தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பழைய பிரச்சனைகள் குறையும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில ஆதரவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சித்திரை : கவனம் வேண்டும். சுவாதி : பிரச்சனைகள் குறையும். விசாகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
October 4 Rasipalan9/13

விருச்சிகம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : சாதகமான நாள். அனுஷம் : சூட்சுமங்களை அறிவீர்கள். கேட்டை : அறிமுகங்கள் ஏற்படும்.
October 4 Rasipalan10/13

தனுசு

வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கேளிக்கை செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கணவன்-மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இலக்கியம் குறித்த சில புரிதல்கள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மூலம் : முன்னேற்றமான நாள். பூராடம் : நெருக்கம் உண்டாகும். உத்திராடம் : புரிதல்கள் மேம்படும்.
October 4 Rasipalan11/13

மகரம்

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றமான சூழல் உருவாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மிகப் பயணம் சாதகமாகும். விளையாட்டு செயல்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். உலகில் நடவடிக்கைகள் மூலம் மனதில் மாற்றங்களும் பழக்கவழக்கங்களில் புதுமையும் உருவாகும். புதுவிதமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் உத்திராடம் : மாற்றமான நாள். திருவோணம் : ஆர்வம் ஏற்படும். அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.
October 4 Rasipalan12/13

கும்பம்

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் சில சூட்சுமங்களை கற்றுத் தருவார்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும். சதயம் : லாபங்கள் மேம்படும். பூரட்டாதி : சாதகமான நாள்.
October 4 Rasipalan13/13

மீனம்

கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். நண்பர்கள் மூலம் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். விவசாயம் சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயமும் லாபமும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். உத்திரட்டாதி : தொடர்புகள் அதிகரிக்கும். ரேவதி : சாதகமான நாள்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
முதல்வர் விஜய்யின் தாராபுரம் ரோடு ஷோ... எந்த வழித்தடத்தில்? - முழு விவரம் இதோ

முதல்வர் விஜய்யின் தாராபுரம் ரோடு ஷோ... எந்த வழித்தடத்தில்? - முழு விவரம் இதோ

2

மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்... இந்திய திரையுலகிற்கு பேரிழப்பு

3

நாளை (அக்டோபர் 4) 4 மாவட்டங்களில் கனமழை: சென்னையில் மழை உண்டா?

4

தாய்மாமன் தங்க மோதிரம் : நாமக்கல் மாவட்டத்தில் எந்தெந்த தேதிகளில் வழங்கப்படுகிறது?

5

உணவு பார்சல்களில் ஸ்டேப்ளர் பின்களுக்கு அதிரடி தடை: FSSAI அதிரடி உத்தரவு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.