Southern Railway Special Trains: சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைக்கு தொடர் விடுமுறை இருக்கும் சூழலில், பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், தென் மாவட்ட மக்கள் பயன்பெறலாம்.
தாம்பரம் - செங்கேட்டை - தாம்பரம் சிறப்பு ரயில் மற்றும் ஈரோடு - திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் நின்று செல்லும் இடங்கள், மொத்த பெட்டிகள், முன்பதிவு விவரம், ரயில்களின் அட்டவணை ஆகியவற்றை இங்கு விவராக காணலாம்.
1/5
விஜயதசமி விடுமுறை சிறப்பு ரயில்
நவராத்திரி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை தற்போது அறிவித்துள்ளது. தாம்பரம் - செங்கேட்டை - தாம்பரம் சிறப்பு ரயில் மற்றும் ஈரோடு - திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களின் முன்பதிவு நாளை (அக். 15) காலை 8 மணிக்கு தொடங்கும். எனவே, பயணிகள் இந்த சிறப்பு ரயில்களின் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். (AI Generated Image : ChatGPT)
2/5
ஈரோடு - திருநெல்வேலி சிறப்பு ரயில்
ரயில் எண்: 06145 - வரும் வெள்ளி (அக். 16) அன்று ஈரோட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (அக். 17) மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் சேலம், ஜாலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். (AI Generated Image : ChatGPT)
3/5
திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்
ரயில் எண் 06146, அடுத்து அக். 20ஆம் தேதி (செவ்வாய்) அன்று திருநெல்வேலியில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் (அக். 21) காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தரையும். ஈரோடு - திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி - தாம்பரம் ரயிலில் மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் - 4, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 4, இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் - 9, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 2 இருக்கும். (AI Generated Image : ChatGPT)
4/5
தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் சிறப்பு ரயில்
ரயில் எண் 06089, அக். 19ஆம் தேதி அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (அக். 20) மதியம் 12.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தொடர்ந்து, அந்த ரயில் (எண்: 06090) அக். 20ஆம் தேதி அன்று செங்கோட்டையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, அக். 21ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். (AI Generated Image : ChatGPT)
5/5
எங்கெல்லாம் நின்று செல்லும்...?
தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் ரயிலில் ஏசி பெட்டிகள் கிடையாது. 8 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பொது பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் தாம்பரம் - செங்கோட்டை இடையே செங்கல்பட்ட, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக நின்று செல்லும். (AI Generated Image : ChatGPT)