• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவில் முக்கிய மாற்றம்... சென்னை மக்கள் கவனத்திற்கு...

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவில் முக்கிய மாற்றம்... சென்னை மக்கள் கவனத்திற்கு...

Written BySudharsan G
Published: Nov 23, 2026, 01:34 IST|Updated: Nov 23, 2026, 01:37 IST
joinshare
பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையத்தை இணைக்கும் வழித்தடத்தில் நாளை (நவ. 24) முதல் காலை நேர மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மஞ்சள் வழித்தடம் பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி வரை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதில் போரூர் - வடபழனி வரை உள்ள 7 ரயில் நிலையங்கள் திறக்கப்படவில்லை. அதன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Chennai Metro Rail1/5

மஞ்சள் வழித்தடத்தில் முக்கிய மாற்றம்

பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து போரூர் சந்திப்பு வழியாக வடபழனி மெட்ரோ நிலையத்தை இணைக்கும் மஞ்சள் வழித்தடத்தில் பயணிகள் சேவை 2026ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்நிலையில், காலை நேர மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
Chennai Metro Rail2/5

7 ரயில் நிலையங்களில் பணிகள்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட பதிவில், மஞ்சள் வழித்தடத்தில் மீதமுள்ள 7 மெட்ரோ நிலையங்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, காலை நேர மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail3/5

காலை நேர சேவையில் மாற்றம்

தற்போது மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணிமுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் வேளையில் இந்நிலையில், போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை அமைய உள்ள 7 புதிய மெட்ரோ நிலையங்களின் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், மஞ்சள் வழித்தடத்தில் காலை நேர மெட்ரோ ரயில் சேவை என்பது நவ. 24ஆம் தேதி முதல் காலை 6 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்குத் தொடங்கும்.
Chennai Metro Rail4/5

சேவையில் மாற்றம் ஏன்?

போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி இடையேயான பகுதியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கத்திற்கான தானியங்கி சிக்னல் அமைப்பு சோதனை உள்ளிட்ட பல்வேறு ரயில் பரிசோதனை பணிகளைத் தடையின்றி விரைவாக மேற்கொள்வதற்காகவே இந்த கூடுதல் நேர அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail5/5

பயணிகள் கவனத்திற்கு...

இந்த தற்காலிக நேர மாற்றத்தால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்தம் தெரிவித்துள்ள நிலையில, போரூர் - வடபழனி இடையேயான மீதமுள்ள நிலையங்களை விரைவில் திறந்து, மெட்ரோ இணைப்பை மேம்படுத்தவும் பொதுமக்களின் பயணத்தை மேலும் எளிதாக்கவுமே இந்த நடவடிக்கை அவசியமாகிறது என CMRL விளக்கமளித்துள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் பயணிப்பவர்கள் அடுத்து அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை காலை 7 மணிக்குதான் தொடங்கும் என நினைவில் வைத்து, அதற்கேற்ப தங்களின் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளவும்.
TAGS:
Chennai

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.