• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /புதுச்சேரி ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரண உயர்வு: ஓய்வூதிய உயர்வுடன் அரியரும் கிடைக்கும்

புதுச்சேரி ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரண உயர்வு: ஓய்வூதிய உயர்வுடன் அரியரும் கிடைக்கும்

Written BySripriya Sambathkumar
Published: Nov 20, 2026, 16:14 IST|Updated: Nov 20, 2026, 16:20 IST
joinshare
Puducherry DR Hike: புதுச்சேரி ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை, அதாவது 4 மாதங்களுக்கான அரியர் தொகை கிடைக்கும். இதனால் நவம்பர் மாதம் கிடைக்கும் ஓய்வூதியத்துடன் அவர்களுக்கு ஒரு பெரிய தொகை மொத்தமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

Puducherry DR Hike: புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 60 சதவிகிதத்திலிருந்து 63 சதவிகிதமாக அதிகரிக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ளது.

Puducherry Pensioners1/8

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள்

புதுச்சேரி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 60 சதவிகிதத்திலிருந்து 63 சதவிகிதமாக அதிகரிக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை புதுச்சேரி அரசு பிறப்பித்துள்ளது.
Central Government Employees2/8

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 60%-இலிருந்து 63% ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பல மாநிலங்கள் தங்கள் அரசு ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் -ஐ அதிகரித்து வருகின்றன.
Dearness Relief3/8

அகவிலை நிவாரணம்

இதைத் தொடர்ந்து புதுச்சேரி நிர்வாகமும் அகவிலை நிவாரணம் குறித்த இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து அடிப்படை ஓய்வூதியத்தில் 60% ஆக இருந்த அகவிலை நிவாரணம் 63% ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dearness Relief Arrears4/8

அகவிலை நிவாரணம் அரியர் தொகை

ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை முதல் அக்டோபர் வரை, அதாவது 4 மாதங்களுக்கான அரியர் தொகை கிடைக்கும். இதனால் நவம்பர் மாதம் கிடைக்கும் ஓய்வூதியத்துடன் அவர்களுக்கு ஒரு பெரிய தொகை மொத்தமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.
Pensioners Benefit5/8

4 பிராந்திய ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை

புதுச்சேரி நிர்வாகத்தின் இந்த உத்தரவின் மூலம் புதுச்சேரி மட்டுமின்றி காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அதாவது ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் நன்மை கிடைக்கும். இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 25 ஆயிரம் அரசு ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pension Hike6/8

ஓய்வூதிய உயர்வு எவ்வளவு

3% அகவிலை நிவாரண உயர்வால் ஓய்வூதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும்? இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ரூ.20,000 மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரருக்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
63% Dearness relief7/8

63% அகவிலை நிவாரணம்

ரூ.20,000 மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரருக்கு 60% அகவிலை நிவாரணத்தில் ரூ.12,000 கிடைக்கும். அதிகரிக்கப்பட்ட 63% அகவிலை நிவாரணத்தில் ரூ.12,600 கிடைக்கும். இந்த வகையில், அவருக்கு மாதம் ரூ.600 கூடுதலாக கிடைக்கும். 4 மாத அரியர் தொகையாக ரூ.2,400 கிடைக்கும்.
Dearness Allowance and Dearness Relief8/8

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க ஏதுவாக மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை, அதாவது, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் திருத்தம் செய்யப்படுகின்றது.
TAGS:
Puducherry
Dearness Allowance

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

2

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

3

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

4

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

5

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.