• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /புதுச்சேரி: கேஸ் சிலிண்டர் மானியம் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா? CM அறிவிப்பு

புதுச்சேரி: கேஸ் சிலிண்டர் மானியம் அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா? CM அறிவிப்பு

Written ByUmabarkavi K
Published: Aug 29, 2026, 15:29 IST|Updated: Aug 29, 2026, 15:41 IST
joinshare
Puducherry Govt LPG Subsidy Hike: புதுச்சேரியில் கேஸ் சிலிண்டர் மானியத்தை உயர்த்தி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.350 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Puducherry Govt LPG Subsidy Hike: யாருக்கெல்லாம் எவ்வளவு கேஸ் மானியம் வழங்கப்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

LPG Subsidy1/5

புதுச்சேரி பட்ஜெட்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நிறைவடைந்த பின்பு, இறுதியாக பதிலளித்து முதல்வர் ரங்கசாமி இன்று பேசினார். அப்போது, இன்று பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆம் ஆண்டுக்கான ரூ.14,300 கோடி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்தார் முதலமைச்சர் ரங்காசி.
LPG Subsidy2/5

எல்பிஜி மானியம் உயர்வு

அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் தற்போது சிவப்பு மற்றும் மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.300 மற்றும் ரூ.150 எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியமாக அரசு வழங்கி வருவதாகக் கூறினார். மேலும், இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.50 எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியமாக அரசு வழங்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
LPG Subsidy3/5

யாருக்கெல்லாம்?

அதாவது, சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.50 மானியம் உயர்த்தப்பட்டு, ரூ.350 ஆகவும், மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.200 ஆகவும் இனி வழங்கப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார். அதாவது, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ரூ.350, பிற குடும்பத்தினருக்கு ரூ.200 உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
LPG Subsidy4/5

ரூ.50 மானியம் உயர்வு

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் மாதாந்திர செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை முதலமைச்சர் என். ரங்கசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
LPG Subsidy5/5

முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

தகுதியான குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் இந்த மானியத் தொகை வரவு வைக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனால், கேஸ் மானியம் பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Puducherry

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
2027 சனி பெயர்ச்சி:  ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை..  இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

2

திருச்சி அரசு வேலைவாய்ப்பு: 85 செவிலியர் பணியிடங்கள் - மாதம் ரூ.21,000 ஊதியம்!

3

சென்னை அரசு வேலைவாய்ப்பு: பெண்கள் தனிச்சிறையில் பணி - மாதம் ரூ.25,000 ஊதியம்!

4

நாட்டின மாடு வளர்க்கும் பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

5

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.