Madurai Temple Tour: புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமாள் திருக்கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சிறப்பு சுற்றுலா அழைத்து செல்கிறது. அந்த வகையில், மதுரையில் ஒரே நாளில் 6 பெருமாள் கோல்களை தரிசிக்க முடியும்.
Madurai Temple Tour: மதுரை மாவட்ட ஆன்மீக சுற்றுலாவுக்கு எவ்வளவு கட்டணம், எப்படி டிக்கெட் முன்பதிவ செய்யலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1/5
புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலா
புராட்டாசி மாதம் செப்டம்பர் 18ஆம் தேதி பிறந்தது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெருமாளை தரிசிப்பது மிகவும் முக்கியமானதாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வளர்ச்சி சுற்றுலா கழகம் ஒரே நாளில் பெருமாள் கோயில்களை தரிசிக்கும் வகையில், சிறப்பு சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
2/5
மதுரை மாவட்ட புரட்டாசி மாத சுற்றுலா
சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களை தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் எந்தெந்த கோயில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பெருமாள் கோயில் சுற்றுலா அழைத்து செல்கிறது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
3/5
எந்தெந்த பெருமாள் கோயில்களில் தரிசனம் செய்யலாம்
மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோயில், வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்கு TTDC சுற்றுலா அழைத்து செல்கிறது.
4/5
மதுரை புரட்டாசி மாத ஆன்மீக சுற்றுலாவுக்கு ரூ.1400 கட்டணம்
மேற்கண்ட 6 பெருமாள் கோயில்களுக்கு ஒரு நபருக்கு ரூ.1,400 கட்டணமாக விதிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா கட்டணத்தில் மதிய உணவு, சிறப்பு தரிசனம், சொகுசு பேருந்து ஆகியவை இடம்பெற்றிருக்கும். எனவே, புரட்டாசி மாதத்தில் மதுரையில் உள்ள பெருமாள் கோயில்களுக்கு சுற்றுலா செல்ல விருப்பப்படுபவர்கள் உடனே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்படடுள்ளது.
5/5
பெருமாள் கோயில் சுற்றுலாவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
பெருமாள் கோயில் சுற்றுலா செல்ல விருப்பப்படுபவர்கள் ttdcoonline.com என்ற இணையதளம் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். 1800 425 31111, 044-2533333/444, 75500 63121 என்ற எண்ணை தொடர்பு கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.