• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /அட்லீ-யின் ‘ராக்கா’: ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்? ரசிகர்கள் ஷாக்

அட்லீ-யின் ‘ராக்கா’: ரிலீஸ் தேதி அதிரடி மாற்றம்? ரசிகர்கள் ஷாக்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 12, 2026, 01:48 PM IST|Updated: Sep 12, 2026, 01:53 PM IST
joinshare
Raakka Release Date : அட்லி மற்றும் அல்லு அர்ஜூன் இயக்கத்தில் உருவாகும் ராக்கா ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட்

Raakka Release Date : சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராக்கா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
 

Raakka Release Date Update1/6

அல்லு அர்ஜுன்

அட்லீ இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது 2028 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் திரையுலக வட்டாரங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Raakka Release Date Update2/6

புஷ்பா 2

ஷாருக்கானின் மெகா ஹிட் ‘ஜவான்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லீயும், இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த ‘புஷ்பா 2’ படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுனும் இணையும் புதிய மெகா பட்ஜெட் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தைப் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
Raakka Release Date Update3/6

மிருணாள் தாக்கூர்

இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நாயகி தீபிகா படுகோன் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், சமீபத்திய ஹிட் பாடல்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Raakka Release Date Update4/6

படப்பிடிப்பு அடுத்த ஆண்டு

முன்னதாக, இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் திட்டமிட்டு முடித்துவிடப் படக்குழு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் மற்றும் திரைக்கதையின் தன்மை காரணமாக இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு வரை தொடர்ந்து நீடிக்கும் என்று தற்போது தெரியவந்துள்ளது.
Raakka Release Date Update5/6

குடியரசு தின விடுமுறை

படப்பிடிப்பு தள்ளிப்போவது மட்டுமின்றி, அதிக அளவிலான கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்குப் போதிய அவகாசம் தேவைப்படுவதால், படம் 2028-ஆம் ஆண்டுதான் திரையரங்குகளுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, 2028 ஆம் ஆண்டின் குடியரசு தின விடுமுறை அல்லது கோடை விடுமுறையைக் குறிவைத்து படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.
Raakka Release Date Update6/6

லோகேஷ் கனகராஜ்

ரிலீஸ் தேதி தள்ளிப்போனாலும், உலகத் தரம் வாய்ந்த பிரம்மாண்டமான படைப்பை ரசிகர்களுக்குக் கொடுப்பதே அட்லீயின் நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்த ‘ராக்கா’ படத்தின் பணிகளை முழுமையாக நிறைவு செய்த பிறகு, அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

2

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

3

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

4

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

5

திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.