Kulasekarapattinam Dasara Festival: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் ரூ.100 கட்டண விரைவு தரிசனம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு ஏற்ப பக்தர்கள் தங்கள் தரிசனத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
Kulasekarapattinam Dasara Festival: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா 11.10.2026 முதல் 21.10.2026 வரை நடைபெற உள்ளது. திருவிழாவினை முன்னிட்டு, பக்தர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1/5
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துராமன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தசரா திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி நடந்தது. அக்டோபர் 11ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை முத்துராமன் கோயிலில் தசரா திருவிழா நடக்கும்.
2/5
தசரா திருவிழா குறித்து அறநிலையத்துறை ஆலோசனை
தசரா திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன்னிலையில் 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கத்தில் வைத்து நடைப்பெற்றது.
3/5
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கோலாகலம்
இதனால், தினந்தோறும் முத்துராமன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், அறநிலையத்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரப்பட்டினம் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
4/5
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் கட்டண தரிசனம் ரத்து
இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் 2026 ஆம் ஆண்டிற்கான தசரா திருவிழா 11:10.2026 முதல் தொடங்கி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்திருவிழாவானது 21:10:2026 அன்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெறும். மேற்படி திருவிழாவில் சுமார் 15 இலட்சம் பக்தர்களுக்கு மேல் திருக்கோயிலுக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
5/5
அக்டோபர் 21 வரை ரூ.100 கட்டண தரிசனம் ரத்து
கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி திருவிழா காலங்களில் (11.10.2026 முதல் 21.10.2026 வரை) அதிகமான மக்கள் கூட்டத்தின் காரணமாகவும், தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அதிக நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காகவும் மற்றும் விரைவாக தரிசனம் செய்வதற்காகவும் ரூ.100 கட்டண தரிசனம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும் பொது தரிசன பாதையில் அனுமதிக்கபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.