• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அக்டோபரில் சனி நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு ராஜயோகம், நல்ல காலம் ஆரம்பம் ஆகும்

அக்டோபரில் சனி நட்சத்திர பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு ராஜயோகம், நல்ல காலம் ஆரம்பம் ஆகும்

Written BySripriya Sambathkumar
Published: Sep 25, 2026, 03:55 PM IST|Updated: Sep 25, 2026, 04:02 PM IST
joinshare
Sani Nakshatra Peyarchi: அக்டோபர் மாதம் சனி நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் 4 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் அக்டோபர் அக்டோபர் 9 அன்று மாலை 7:28 மணிக்கு, தனது சொந்த நட்சத்திரமான 'உத்திரட்டாதி' நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். தற்போது, ​​சனி 'ரேவதி' நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சஞ்சரித்து வருகிறார். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் மொத்தம் ஐந்து ராசிகளுக்கு நன்மைகளைத் தரவுள்ளது.

Sani Nakshatra Peyarchi1/8

சனி நட்சத்திர பெயர்ச்சி

அனைத்து கிரகங்களில் மிக முக்கியமான கிரகமான சனி பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி தனது நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
Sani Peyarchi Palangal2/8

சனி பெயர்ச்சி பலன்கள்

சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகபடியான நன்மைகள் நடக்கும். பணியில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். அவர்களின் நிதி நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும். சனி நட்சத்திர பெயர்ச்சியால் மேம்பட்ட நன்மைகளை பெறப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gemini3/8

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி பெரிய அளவிலான நன்மைகளை அளிக்கும். அக்டோபர் 9-க்குப் பிந்தைய காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் வேலை மற்றும் தொழிலில் ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும்.
Virgo4/8

கன்னி

சனி பகவானின் இந்த பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு நேர்மறையான முன்னேற்றங்களைக் கொடுக்கும். வேலையில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கத் தொடங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களுடன் மனதை வைத்திருப்பதே மிக முக்கியம். இக்காலகட்டத்தில் எதிர்மறை எண்ணங்கள் எதுவும் உங்கள் மனதில் எழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
Libra5/8

துலாம்

சனி நட்சத்திர மாற்றம் துலாம் ராசியினருக்கும் நற்பலன்களைத் தரும். தடைபட்டிருந்த பணிகள் மீண்டும் வெற்றிகரமாகத் தொடங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையே சரியான சமநிலை ஏற்படும். இருப்பினும், தேவையற்ற செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
Capricorn6/8

மகரம்

மகர ராசிக்கு சனி பகவான்தான் அதிபதி. ஆகையால் இந்த சனி பெயர்ச்சி மகர ராசிக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். பண வரவு அதிகமாகும். வணிகத்தில் லாபம் கிடைக்கும். திடீர் பண வரவுக்கான வாய்ப்புகளும் உள்ளன.
Saturn Transit7/8

சனி நட்சத்திர பெயர்ச்சி

சனி நட்சத்திர பெயர்ச்சிசியால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்த்து சனி பகவானின் அருள் பெற, தினமும் "ஓம் சனைச்சராய வித்மஹேசூர்யபுத்ராய தீமஹிதன்னோ மந்தப் ப்ரசோதயாத்" என்ற சனி காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம். மேலும், சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா போன்ற மந்திரங்களை சொல்வதும் நல்லது.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.