Sani Nakshatra Peyarchi: அனைத்து கிரகங்களிலும் மிகவும் முக்கிய கிரகமாக இருக்கும் சனி பகவான் நாளை (அக்டோபர் 9) உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி ஆகிறார். இதனால் 5 ராசிகளின் வாழ்வே மாறப்போகின்றது. உங்கள் ராசியும் அந்த அதிர்ஷ்ட பட்டியலில் உள்ளதா?
Saturn Transit: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவானின் ஒரு சிறிய அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவான் நாளை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்போகும் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மிகச்சிறந்த நன்மைகள் நடக்கவுள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
1/9
சனி நட்சத்திர பெயர்ச்சி
சனி பகவான் நாளை (அக்டோபர் 9 ஆம் தேதி) உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி ஆகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, அவர் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். எனவே, அவர் தனது சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவது ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
2/9
சனி பெயர்ச்சி
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் தான் ஆளும் நட்சத்திரத்தில் அமைந்திருக்கும்போது அதன் ஆற்றல் மிகவும் வலிமையாகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனியாக இருப்பதால், அவர் இப்போது அதே நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி ஆவது விசேஷமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
3/9
சனி பெயர்ச்சி பலன்கள்
சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு சனி பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
4/9
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். உடல் ஆரொக்கியம் நன்றாக இருக்கும். நிதி விவகாரங்களிலும் படிப்படியான முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
5/9
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான பலன்களை அளிக்கும். தொழில் மற்றும் நிதி விவகாரங்களில் சாதகமான நன்மைகள் ஏற்படும். வேலை அல்லது தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கலாம், ஆனால் இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரக்கூடியதாக அமையும்.
6/9
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி நிதி ஸ்திரத்தன்மையை அளிக்கும். கடின உழைப்பின் மூலம் நன்மைகளைப் பெறுவதற்கும், கடந்த கால முயற்சிகளுக்கான பலன்களைக் காண்பதற்கும் வாய்ப்புள்ளது. அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
7/9
துலாம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகுலமான நன்மைகளை அளிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி வேலை மற்றும் நிதி விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம். வேலையில் புதிய பொறுப்புகளை ஏற்பதற்கோ அல்லது புதிய வணிகத் திட்டத்தில் செயல்படுவதற்கோ வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
8/9
மகரம்
மகர ராசிக்குச் சனி பகவானே அதிபதி ஆவார். ஆகையால், சனி நட்சத்திர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் பொறுமை சார்ந்த விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
9/9
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.