• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /திரையுலகிலிருந்து தள்ளியே இருக்கும் நானா படேகர் குடும்பம்! காரணம் என்ன?

திரையுலகிலிருந்து தள்ளியே இருக்கும் நானா படேகர் குடும்பம்! காரணம் என்ன?

புகழ்பெற்ற பிரபல நடிகரான நானா படேகர் உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சமயத்தில், வெளிச்சத்திலிருந்து தள்ளியிருக்கும் அவரது மகன் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 08, 2026, 01:30 PM IST|Updated: Oct 08, 2026, 01:37 PM IST
joinshare
திரையுலகிலிருந்து தள்ளியே இருக்கும் நானா படேகர் குடும்பம்! காரணம் என்ன?
Image Credit: Nana Patekar Family | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: "வாக்குகளை காப்போம்" -அக்டோபர் 10 தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் மக்கள் போராட்டம்!

Explained: "வாக்குகளை காப்போம்" -அக்டோபர் 10 தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வெடிக்கும் மக்கள் போராட்டம்!

2

UPI MDR கட்டணம்: அமலாக்கம் ஒத்திவைப்பா? பண்டிகை காலத்தில் NCPI நிவாரணம்

3

96 திரைப்படம் ரீ-ரிலீஸ்! நாளை முதல் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம்..

4

கேப்டன் பதவியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்? கம்பீர் அதிரடி.. பிசிசிஐ கைகாட்டும் வீரர்!

5

திரையுலகிலிருந்து தள்ளியே இருக்கும் நானா படேகர் குடும்பம்! காரணம் என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியில், ஜாம்பவன் நடிகராக திகழும் நானா படேகர், தமிழில் பொம்மலாட்டம், காலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர், அக்டோபர் 8ஆம் தேதியான இன்று உலகை விட்டு மறைந்திருக்கிறார். இவரது மறைவு திரையுலகினருக்கு பெருந்துயரை ஏற்படுத்தி இருப்பதை அடுத்து, அவரது மகன் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது.

நானா படேகர் உயிரிழப்பு:

நடிகர் நானா படேகர், கோவாவில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, அவருடைய மருத்துவக்குழு வீட்டிற்கு சென்றிருக்கிறது. அங்கு சென்று பார்க்கையில் நானா படேகர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வரை சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதிகாலை 5.20 மணியளவில் அவர் உயிர் பிரிந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நானா படேகர் பிரபல புகழ்பெற்ற நடிகராக இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு அவரது குடும்பம் பற்றி பெரிதாக தெரியாது. அவர்கள் குறித்துதான் இங்கு பார்க்கப்போகிறோம்.

குடும்ப பின்னணி:

நானா படேகரின் உண்மையான பெயர், விஸ்வநாத் படேகர். இவர், மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள முருட்-ஜஞ்சிரா எனும் இடத்தில், மராத்தி குடும்பத்தில் பிறந்தவர்.

நானா படேகரின் தந்தை, தின்கர் படேகர் ஒரு ஜவுளி ஓவியர் மற்றும் சிறு தொழில்களை செய்து வ்ந்தவர். இவருடைய தாய் சஞ்சனா பாய் படேகர், இல்லத்தரசியாக இருந்தார். நானா படேகர், தன்னுடைய குழந்தைப்பருவத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டனவர். இருப்பினும் தன்னுடைய கடின உழைப்பால் பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.

மேலும் படிக்க | Nana Patekar : நானா படேகர் காலமானர்! கோவா வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுப்பு..நடந்தது என்ன?

நானா படேகரின் மனைவியின் பெயர், நீலகாந்தி. இவரும் திரைத்துறையில் தொடர்புடையவர். இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் சட்டப்பூர்வமாக மட்டுமே இருப்பதாகவும், ஒன்றாக ஒரே வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் தங்களது பிரிவு குறித்து இருவரும் ஒரு  போதும் வெளியில் பேசிக்கொண்டதே இல்லை.

இவர்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். மூத்த மகனான துர்வாசா, இரண்டு வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இளைய மகன் மல்ஹர் படேகர், உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர் நடிப்பிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தன் தந்தையை போலவே இவரும் கேமராவின் கண்களில் இருந்துதள்ளியே இருந்தார். சமூக வலைதளங்களில் கூட ஆக்டிவாக இல்லை.

நானா படேகரர், இயல்பாகவே முன்கோபம் மிக்கவர். பல இடங்களில் இவர் பேசிய சில விஷயங்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். அதே சமயத்தில் அனைவரும் இவரை நேர்மையான மனிதர் என்றும் கூறுவதுண்டு. அதே சமயத்தில் தன்னுடைய ஃப்ரீ டைமில் விவசாயம் செய்வது, பிறருக்கு உதவுவது என்றிருந்தார் நானா படேகர். பெரிய ஸ்டாராக இருந்தாலும், எளிமையை கடைப்பிடித்த இவர் பாேலவே அவருடைய குடும்பமும் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்தியன் 3 அறிவிப்பு வெளியீடு! முதல் 2 பாகத்தை விட சூப்பரா இருக்குமோ?

Add Zee News as a Preferred Source
TAGS:
India