• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சனி நட்சத்திர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி, பொற்காலம் ஆரம்பம்

சனி நட்சத்திர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி, பொற்காலம் ஆரம்பம்

Written BySripriya Sambathkumar
Published: Oct 03, 2026, 02:51 PM IST|Updated: Oct 03, 2026, 02:57 PM IST
joinshare
Sani Nakshatra Peyarchi: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நன்மைகளை அளிக்கும் சனி பகவான் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது 5 ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். உங்கள் ராசிக்கும் இதனால் பலன் கிடைக்குமா என இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருக்கிறார். அக்டோபர் 9, 2026 அன்று மாலை 7:28 மணிக்கு, சனி பகவான் தனது சொந்த ராசிக்குரிய நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். சனி பகவான் இந்த நட்சத்திரத்தில் சுமார் 83 நாட்கள் வரை தங்கி, தனது தனித்துவமான ஆற்றலின் தாக்கத்தை வெளிப்படுத்துவார். இக்காலகட்டத்தில், ஐந்து அதிர்ஷ்ட ராசிக்காரர்களுக்கு ஒரு "பொற்காலம்" தொடங்கவுள்ளது. இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Taurus1/7

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு, சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி புதிய நம்பிக்கையையும் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும். குடும்பத்தில் அமைதி இருக்கும். நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தொடர்ந்த நிதிச் சிக்கல்களும் மன அழுத்தமும் படிப்படியாகக் குறையத் தொடங்கும். பண வரவு அதிகரிக்கும். தடைபட்ட பணிகள் மீண்டும் வேகம் பெறும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.
Gemini2/7

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, சனி நட்சத்திர பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும்.இது நேர்மறையான பலன்களைத் தரும். இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் நிதி நிலை வலுவடையும், மேலும் எதிர்பாராத பண வரவுக்கான புதிய வழிகளும் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வணிகம் சார்ந்த பணிகள் இப்போது விரைவாக நிறைவடையும்.
Virgo3/7

கன்னி

கன்னி ராசியினருக்கு, இந்த 83 நாள் காலக்கட்டம் மிகச் சிறப்பாகவும் அமைதியாகவும் அமையும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். உடல் ஆரோக்கியன் நன்றாக இருக்கும். உங்கள் பரபரப்பான பணிக்கு இடையிலும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிட உங்களுக்கு நேரம் கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். போட்டித் தேர்வுகள் அல்லது உயர்கல்விக்குத் தயாராகும் மாணவர்கள், தங்கள் கடின உழைப்பிற்கான முழுமையான நற்பலன்களைப் பெறுவார்கள்.
Libra4/7

துலாம்

துலாம் ராசியினரைப் பொறுத்தவரை, இந்த சனி பெயர்ச்சி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் மிகச் சிறிய முயற்சியும் கூட எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க பலன்களைத் தரும். குழந்தைகளால் நன்மையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சமீபகாலமாக உடல் அல்லது மனநலம் சார்ந்த பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டிருந்தால், இப்போது அவற்றில் விரைவான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். மேலும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.
Capricorn5/7

மகரம்

மகர ராசிக்குச் சனியே அதிபதி. ஆகையால், சனி நட்சத்திரப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் மிக ஆழமான மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் திட்டமிட்டிருந்த அனைத்து நற்காரியங்களும் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக நிறைவேறும். வெளிநாடு செல்வது அல்லது வெளிநாட்டுச் சந்தை சார்ந்த தொழிலைத் தொடங்குவது குறித்து நீங்கள் நீண்ட காலமாக யோசித்துக்கொண்டிருந்தால், இந்தக் காலகட்டம் அதற்கான சரியான நேரமாக இருக்கும். எனினும் இந்த காலத்தில் உங்கள் உணவுமுறை மற்றும் உடல்நலத்தில் சற்று கவனம் தேவை.
Sun Transit Effects6/7

சனி தோஷம் நீங்க

சனி தோஷம் நீங்கி சனி பகவானின் பரிபூரண அருளை பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் போன்ற மந்திரங்களை தினமும் பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு உதவும் நபர்களை சனி பகவான் என்றும் சோதிப்பதில்லை.
Disclaimer7/7

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

2

Explainer: சிலிக்கான் வேலியை அதிர வைத்த ரகசிய ‘Me Too' ஆவணம்! பெண்களுக்கு இடையில் விஸ்பர் நெட்வொர்க்!

3

மதுராந்தகம், தாராபுரம்: நாளை மாலை முதல் அமலுக்கு வரும் விதிகள் என்னென்ன?

4

திருச்சி : ஓய்வூதியதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு! ஒரே நாளில் பிரச்சனைகளுக்கு தீர்வு

5

இந்துசமய அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கும் 12 மாத கால மகப்பேறு விடுப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.