அக்டோபர் 4 ஆம் தேதி சனி மற்றும் சூரியன் எதிரெதிர் நிலையில் சந்திக்கிறது. இதனால் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றனர். அவர்கள் யார் யார்? என்பதை இங்கு பார்க்கலாம்.
1/5
அக்டோபர் 4ல் எதிரெதிர் சந்திக்கும் சனி - சூரியன்
ஜோதிடத்தின்படி, அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 5.56 மணிக்கு சூரியனும் சனியும் எதிரெதிர் நிலையில் அமைகின்றன. ’பிரதியுதி’ எனப்படும் இந்த கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடும்.
2/5
கன்னி - நிதி சிக்கலில் தீர்வு கிடைக்கும்
கன்னி ராசிக்காரர்களுக்கு உறவுகளில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையலாம். மூதாதையர் சொத்துகள் மூலம் அதாயம் கிடைக்கவும், கடன் சுமை குறையவும் வாய்ப்புள்ளது. திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடைவதுடன் சேமிப்பும் அதிகரிக்கக்கூடும்.
3/5
தனுசு - வெற்றிக்கு வழிவகுக்கும் கிரக அமைப்பு
தனுசு ராசிக்காரர்கள் எதிர்கொண்ட சவால்களில் இருந்து நிம்மதி பெறலாம். பணியிடத்தில் முயற்சிகளுக்கு பலன் கிடைப்பதுடன், செயல்திறனும் மேம்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் வாய்ப்புள்ளது.
4/5
சிம்மம் - தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் அங்கீகாரம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தைவிட அதிக லாபம் கிடைக்கலாம். மாணவர்களும் கல்வியில் சாதகமான பலன்களை பெறலாம்.
5/5
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.