• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /செங்கோட்டை டூ ஹைதராபாத்: சிறப்பு ரயில் அறிவிப்பு... முழு விவரம் இதோ

செங்கோட்டை டூ ஹைதராபாத்: சிறப்பு ரயில் அறிவிப்பு... முழு விவரம் இதோ

Written BySudharsan G
Published: Sep 24, 2026, 10:25 PM IST|Updated: Sep 24, 2026, 10:31 PM IST
joinshare
தென்காசி - ஹைதராபாத் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலின் அட்டவணை, நிற்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சார்லபள்ளி - செங்கோட்டை - சார்லபள்ளி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செப். 23ஆம் தேதி அன்றே இந்த ரயிலின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

Southern Railway1/5

சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிப்பு

தெற்கு ரயில்வே ஹைதராபாத் சார்லபள்ளியில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு கடந்த செப். 22ஆம் தேதி சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. சார்லபள்ளி - செங்கோட்டை - சார்லபள்ளி இடையே அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து இங்கு காணலாம்.
Southern Railway2/5

சார்லபள்ளி - செங்கோட்டை

சார்லபள்ளி - செங்கோட்டை (ரயில் எண்: 07191) வெள்ளிக்கிழமை தோறும், அக்டோபர் 2, 9, 16, 23, 30; நவம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் (சனி) மதியம் 2 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மொத்தம் 9 சேவைகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
Southern Railway3/5

செங்கோட்டை - சார்லபள்ளி

செங்கோட்டை - சார்லபள்ளி (ரயில் எண்: 07192) சனிக்கிழமை தோறும் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் அக். 3, 10, 17, 24, 31; நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய நாட்களில் மாலை 5.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லபள்ளி செல்கிறது.
Southern Railway4/5

மொத்தம் எத்தனை பெட்டிகள் இருக்கும்?

சார்லபள்ளி - செங்கோட்டை - சார்லபள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள் - 3, மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் - 5, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் - 10, பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் - 4, லக்கேஜ் பெட்டிகள் - 2 உள்ளிட்ட பெட்டிகள் இயக்கப்பட இருக்கின்றன.
Southern Railway5/5

எங்கெல்லாம் நிற்கும்...?

சார்லபள்ளி மற்றும் செங்கோட்டை இடையே நல்கொண்டா, மிரியாலகுடா, குண்டூர், தெனாலி சந்திப்பு, பாபட்லா, சீராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டஞ்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி சந்திப்பு. செப். 23ஆம் தேதி முதல் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
TAGS:
Southern Railway

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.