• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /செப்டம்பர் 17 ராசிபலன் : இன்று யார் யாருக்கு நல்ல நாள்...?

செப்டம்பர் 17 ராசிபலன் : இன்று யார் யாருக்கு நல்ல நாள்...?

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 05:53 AM IST|Updated: Sep 17, 2026, 06:01 AM IST
joinshare
September 17 Rasipalan: ஆவணி மாதம் 31ஆம் நாளான இன்று (செப்டம்பர் 17), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

September 17, Today Horoscope: இன்று ஆவணி 31ஆம் நாள் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) பரபாவ வருடம்.

September 17 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
September 17 Rasipalan2/13

மேஷம்

முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். பணி புரியும் இடத்தில் அசதிகள் உண்டாகும். மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் இன்றி செயல்படவும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் இன்னல்களை தவிர்க்க முடியும். முக்கியமான கோப்புகளில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் அஸ்வினி : மாற்றம் ஏற்படும். பரணி : வாதங்களை தவிர்க்கவும். கிருத்திகை : கவனம் வேண்டும்.
September 17 Rasipalan3/13

ரிஷபம்

பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். பிறமொழி மக்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும். துணைவர் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். தற்பெருமை எண்ணங்களை குறைத்து செயல்படுவது நன்மை அளிக்கும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கிருத்திகை : புதுமையான நாள். ரோகிணி : அனுசரித்து செல்லவும். மிருகசீரிஷம் : வாய்ப்புகள் அமையும்.
September 17 Rasipalan4/13

மிதுனம்

மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம் மிருகசீரிஷம் : உதவிகள் சாதகமாகும். திருவாதிரை : பொறுப்புகள் குறையும். புனர்பூசம் : ஆதரவான நாள்.
September 17 Rasipalan5/13

கடகம்

புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு பணிகளில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும். பூசம் : ஆரோக்கியம் மேம்படும். ஆயில்யம் : ஆதரவான நாள்.
September 17 Rasipalan6/13

சிம்மம்

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கூட்டணிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் மேன்மை ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் மகம் : சிந்தனைகள் மேம்படும். பூரம் : அனுசரித்து செல்லவும். உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
September 17 Rasipalan7/13

கன்னி

செய்யும் முயற்சிகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் மறையும். உத்தியோகப் பணிகளில் மேன்மைக்கான வாய்ப்புகள் ஏற்படும். சங்கீதம் மற்றும் எழுத்துத் தொடர்பான பணிகளில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வேலையாட்களின் திறமைக்கு ஏற்ப அனுசரித்து செல்வதன் மூலம் லாபங்கள் உருவாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திரம் : தாமதங்கள் மறையும். அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும். சித்திரை : லாபங்கள் பிறக்கும்.
September 17 Rasipalan8/13

துலாம்

மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுவீர்கள். பொருளாதார நிலையில் மேன்மை ஏற்படும். பயணத்தால் லாபம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். உங்கள் பேச்சுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வித்தியாசமான பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் காணப்படும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் சித்திரை : மேன்மை ஏற்படும். சுவாதி : மதிப்புகள் அதிகரிக்கும். விசாகம் : மாற்றங்கள் காணப்படும்.
September 17 Rasipalan9/13

விருச்சிகம்

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். தொழில் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். இணையம் பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மற்றும் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். பொருளாதாரம் பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் விசாகம் : முன்னேற்றமான நாள். அனுஷம் : கவனத்துடன் செயல்படவும். கேட்டை : பிரச்சனைகள் குறையும்.
September 17 Rasipalan10/13

தனுசு

பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணம் சாதகமாக அமையும். சில முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் ஆதரவான சூழல் காணப்படும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் மூலம் : கவனம் வேண்டும். பூராடம் : பயணம் சாதகமாகும். உத்திராடம் : ஆதரவான நாள்.
September 17 Rasipalan11/13

மகரம்

மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரிய செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : விருப்பம் நிறைவேறும். திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும். அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.
September 17 Rasipalan12/13

கும்பம்

மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அதிரடியான செயல்கள் மூலம் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் அவிட்டம் : நம்பிக்கை பிறக்கும். சதயம் : லாபம் மேம்படும். பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
September 17 Rasipalan13/13

மீனம்

திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்களில் ஆலோசித்து முடிவு எடுக்கவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும். உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும். ரேவதி : ஆதாயம் ஏற்படும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.