September 25 Rasipalan: புரட்டாசி மாதம் 8ஆம் நாளான இன்று (செப்டம்பர் 25), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
September 25, Today Horoscope: இன்று புரட்டாசி 8ஆம் நாள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) பரபாவ வருடம்.
1/13
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
2/13
மேஷம்
பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
3/13
ரிஷபம்
முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
4/13
மிதுனம்
உடன்பிறந்தவர்களிடம் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் சிறுதூரப் பயணம் சென்று வருவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
திருவாதிரை : ஆர்வம் ஏற்படும்.
புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.
5/13
கடகம்
மனதில் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டும் நீங்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகப் பணிகளில் திருப்பங்கள் ஏற்படும். சில இழுபறிகளுக்கு பிறகு எதிர்பார்த்த வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : திருப்பங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
6/13
சிம்மம்
உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடும். அந்நிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். கணவன்-மனைவியிடையே புரிதல் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சாம்பல் நிறம்
மகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : அறிமுகங்கள் ஏற்படும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
7/13
கன்னி
சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். அரசால் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமான முயற்சிகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : மேன்மை ஏற்படும்.
சித்திரை : முயற்சிகள் சாதகமாகும்.
8/13
துலாம்
கல்விப் பணிகளில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமையும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : ஆர்வமின்மை குறையும்.
சுவாதி : குழப்பங்கள் நீங்கும்.
விசாகம் : லாபகரமான நாள்.
9/13
விருச்சிகம்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். பழைய நினைவுகள் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை உருவாக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஆதாயகரமான நாள்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
10/13
தனுசு
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடி வரும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : அனுபவங்கள் ஏற்படும்.
உத்திராடம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
11/13
மகரம்
கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
12/13
கும்பம்
நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். அரசு காரியங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
சதயம் : விமர்சனங்கள் நீங்கும்.
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
13/13
மீனம்
நினைத்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வாகனத்தில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : கருத்துகளில் கவனம்.
ரேவதி : சோர்வுகள் உண்டாகும்.