• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /செப்டம்பர் 28 ராசிபலன் : இன்று யார் யாருக்கு லாபகரமான நாள்...?

செப்டம்பர் 28 ராசிபலன் : இன்று யார் யாருக்கு லாபகரமான நாள்...?

Written BySudharsan G
Published: Sep 28, 2026, 05:50 AM IST|Updated: Sep 28, 2026, 05:58 AM IST
joinshare
September 28 Rasipalan: புரட்டாசி மாதம் 11ஆம் நாளான இன்று (செப்டம்பர் 28), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

September 28, Today Horoscope: இன்று புரட்டாசி 11ஆம் நாள் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) பரபாவ வருடம்.

September 28 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
September 28 Rasipalan2/13

மேஷம்

அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கணுக்கால்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனப் பேச்சுக்கள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம் அஸ்வினி : பொறுப்புகள் மேம்படும். பரணி : அலைச்சல்கள் ஏற்படும். கிருத்திகை : பேச்சுகளில் கவனம்.
September 28 Rasipalan3/13

ரிஷபம்

எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் கிருத்திகை : சோர்வுகள் நீங்கும். ரோகிணி : புதுமையான நாள். மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
September 28 Rasipalan4/13

மிதுனம்

தந்திரமாக சில பணிகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மிருகசீரிஷம் : ஆதரவான நாள். திருவாதிரை : பிரச்சனைகள் குறையும். புனர்பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
September 28 Rasipalan5/13

கடகம்

தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். வாகன பயணங்கள் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை குறையும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய முதலீடு செயல்களில் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : வரவுகள் கிடைக்கும். பூசம் : ஆதாயகரமான நாள். ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
September 28 Rasipalan6/13

சிம்மம்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். மறதி பிரச்சனை குறையும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் ஏற்படும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மகம் : பிரச்சனை குறையும். பூரம் : பொறுமை வேண்டும். உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
September 28 Rasipalan7/13

கன்னி

எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உருவாகும். கால்நடைப் பணிகளில் விவேகம் வேண்டும். நீண்ட கால கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கவனக்குறைவால் சில பிரச்சனைகள் உண்டாகும். வரவுகளில் இழுபறியான சூழல் நிலவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும். அஸ்தம் : விவேகம் வேண்டும். சித்திரை : இழுபறியான நாள்.
September 28 Rasipalan8/13

துலாம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்து தடைகள் விலகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். சுவாதி : அறிமுகம் ஏற்படும். விசாகம் : தடைகள் விலகும்.
September 28 Rasipalan9/13

விருச்சிகம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். அனுஷம் : உதவிகள் சாதகமாகும். கேட்டை : தெளிவு பிறக்கும்.
September 28 Rasipalan10/13

தனுசு

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் அனுகூலம் உண்டாகும். பிரபலமானவர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தென் மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : ஒத்துழைப்புகள் மேம்படும். பூராடம் : அனுகூலம் உண்டாகும். உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
September 28 Rasipalan11/13

மகரம்

பணி நிமித்தமான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கிய செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதே தவிர்ப்பது நல்லது. கலை துறைகளில் கற்பனைகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : ஆலோசனை கிடைக்கும். திருவோணம் : அலைச்சல்கள் உண்டாகும். அவிட்டம் : கற்பனைகள் மேம்படும்.
September 28 Rasipalan12/13

கும்பம்

இழுபறியான சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் அவிட்டம் : முடிவுகள் பிறக்கும். சதயம் : நெருக்கம் அதிகரிக்கும். பூரட்டாதி : மாற்றமான நாள்.
September 28 Rasipalan13/13

மீனம்

நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். ஒப்பந்தங்களில் தாமதம் உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். தானிய பொருட்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். வேலையாட்கள் விஷயத்தில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் பூரட்டாதி : அறிமுகம் ஏற்படும். உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும். ரேவதி : பொறுமை வேண்டும்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.