• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /செப்டம்பரில் 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம்!

செப்டம்பரில் 3 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் ஆரம்பம்!

Written ByR Balaji
Published: Aug 23, 2026, 07:49 PM IST|Updated: Aug 23, 2026, 07:54 PM IST
joinshare

செப்டம்பரில் கிரகங்களின் சாதகமான மாற்றங்களால் குறிப்பிட்ட் 3 ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், வேலை என அனைத்திலும் அதிர்ஷ்டம் இருக்கும். 
 

Rasi Palan1/7

ராசி பலன்

2026 செப்டம்பர் மாதம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாதத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொண்டு வரலாம். குறிப்பாக சுக்கிரன், புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Rasi Palan2/7

ராசி பலன்

செப்டம்பர் 2 ம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் பிரவேசிக்கிறார். சுக்கிரன் தனது சொந்த ராசியில் அமர்வதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 7 ம் தேதி புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். புதன் தனது சொந்த ராசியில் இருப்பதால் பத்ர ராஜயோகம் ஏற்படுகிறது.
Rasi Palan3/7

ராசி பலன்

இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 17 ம் தேதி சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். அப்போது புதனுடன் சூரியன் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. மேலும் செப்டம்பர் 18 ம் தேதி செவ்வாய் கடக ராசியில் நுழைந்து குருவுடன் இணைந்து பயணிக்கிறார். இந்த கிரக மாற்றங்கள் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பணவரவு, தொழில் வளர்ச்சி என பல்வேறு வகைகளில் சாதகமாக அமையக்கூடும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.
Rasi Palan4/7

மேஷம்:

மேஷ ராசியினருக்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கத் தொடங்கும். பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம். இதனால் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக பொருளாதார ரீதியாக செப்டம்பர் மாதம் திருப்தியாக இருக்கலாம்.
Rasi Palan5/7

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த சில பணிகள் இந்த மாதத்தில் வெற்றிகரமாக முடிவடையலாம். முதலீடு செய்திருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். தொழில் செய்பவர்கள் புதிய திட்டங்களை தொடங்குவதற்கும், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். சொத்து தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சூழலும் உருவாகலாம். இதனால் நிதி நிலை படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
Rasi Palan6/7

துலாம்:

சுக்கிரன் தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பது இந்த ராசிக்கு கூடுதல் பலத்தை வழங்கும். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படலாம். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் உருவாகலாம். வேலை தேடி வருபவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் அல்லது முக்கியமான வாய்ப்புகள் தேடி வரலாம். மேலும், இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும் சில முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலனை தரக்கூடும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மற்றும் மரியாதையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Rasi Palan7/7

பொறுப்புத் துறப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.