சூரிய பகவான் மற்றும் சனி பகவான் இணைவதால் அசுபமான ஷடாஷ்டக யோகம் இன்று உருவாகிறது. இதனால், அடுத்த சில நாள்களுக்கு இந்த 4 ராசிகளுக்கு சில பிரச்னைகள் வரும்.
அசுபமான ஷடாஷ்டக யோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்...? பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்...? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
1/5
ஷடாஷ்டக யோகம்
தற்போது ஆவணி மாதத்தில், சூரிய பகவான் சிம்ம ராசியில் வீற்றியிருப்பார். கர்மவினைகளை கவனிக்கும் சனி பகவான் மீன ராசியில் இருக்கிறார். இவை இரண்டும் எதிரெதிர் கோள்களாகும். இந்த கிரகங்கள் ஆறாம் மற்றும் எட்டாம் வீடுகளுக்கு இடையில் இருக்கும்பட்சத்தில் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
2/5
4 ராசிகள்
அந்த வகையில், திரிக் பஞ்சாங்கத்தின்படி, இன்று (செப். 6) சூரியனும், சனியும் அமைந்து வருவதால் அசுபமான ஷடாஷ்டக யோகத்தை உருவாகிறது. இதன் தாக்கம் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை நீடிக்கலாம். எனவே இந்த காலகட்டம் சில ராசிகளுக்கு கடினமானதாக இருக்கும். இன்று உருவாகியிருக்கும் யோகத்தால் கன்னி, மகரம், கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பாதிக்கப்படலாம்.
3/5
என்னென்ன பிரச்னைகள் வரலாம்?
ஷடாஷ்டக யோகம் மக்களின் தனிப்பட்ட வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு மன அழுத்தம், மனநலப் பிரச்னைகள், எதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வார்கள். என்னவென்ற தெரியாத அச்சத்தாலும், பிரமைகளாலும் பாதிக்கப்படலாம். அவர்களின் வேலை தடைபடலாம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு காயம் ஏற்படலாம். ஒரு சிலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படலாம்.
4/5
4 ராசிகள் கவனிக்க வேண்டியவை
எனவே இந்த 4 ராசிகள் இந்த சில விஷயங்களை நினைவில்கொண்டால் பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். வேலையில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். அனைவரிடத்திலும் பணிவாக நடந்துகொள்ளுங்கள். குறைவாக பேசுவங்கள். மேலாளர், உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் வேண்டாம். இந்த நேரத்தில் புதிய முதலீடுகளில் தலைப்பட வேண்டாம். நிதிப் பரிவர்த்தனைகளை எச்சரிக்கையுடன் கையாளவும், அவசரமற்ற பரிவர்த்தனைகளை இப்போது செய்ய வேண்டும். சனி பகவானுக்கு விளக்கு போடலாம், சனி பகவான் கோவிலுக்கு போக முடியவில்லை எனில் அரச மரத்தின் கீழ் விளக்கு ஏற்றலாம்.
5/5
பொறுப்பு துறப்பு
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.