Shani Nakshatra Peyarchi: 27 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், மகரம், ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.
Shani Nakshatra Peyarchi: அக்டோபர் 9ஆம் தேதி நடக்கும் இந்த பெயர்ச்சியின்போது தொழில், வேலையில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
1/5
சனி பகவான்
ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சனி பகவான் அறியப்படுகிறார். சனி பகவான் பெயர்ச்சி 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளார். அக்டோபர் 9ம் தேதி இரவு 7.28 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.
2/5
அக்டோபரில் சனி பெயர்ச்சி
பஞ்சாங்கத்தின்படி, சனி பகவான் அக்டோபர் 9ஆம் தேதி அன்று மாலை 7.28 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் சனி வக்ர இயக்கத்தில் இருக்கும். டிசம்பர் 11ஆம் தேதி அன்று சனி பகவான் நேர் இயக்கத்திற்கு மாறுவார். சனி பகவான் பிப்ரவரி 8ம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருப்பார். இதனால், 3 ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.
3/5
ரிஷபம்
ரிஷபம் - சனி பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், வேலையில் முன்னேற்றம் இருக்கும. பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
4/5
துலாம்
துலாம் - சனி பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வழக்கு செயல்களில் அலைச்சல் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணத்தில் புது விதமான அனுபவம் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.
5/5
மகரம்
மகரம் - சனி பகவான் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும். பணியிடத்தில் வருமானம் உயரக் கூடும். நிதி நிலைமை மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தடைகள் நீங்கும். பழைய கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.