• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இந்த 2 ரயில்கள் மதுரை போகாது... தென்மாவட்ட பயணிகளே நோட் பண்ணுங்க!

இந்த 2 ரயில்கள் மதுரை போகாது... தென்மாவட்ட பயணிகளே நோட் பண்ணுங்க!

Written BySudharsan G
Published: Oct 07, 2026, 06:44 PM IST|Updated: Oct 07, 2026, 06:47 PM IST
joinshare
Southern Railway: பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 2 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. எந்தெந்த தேதிகளில் இந்த மாற்றம் என்பதை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

Southern Railway Madurai Division Latest Updates: நடப்பு அக்டோபர் மாதத்தில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதால் தென்மாவட்ட பயணிகள் இதுகுறித்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

Southern Railway1/5

2 ரயில் சேவைகளில் மாற்றம்

குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில் சேவைகளில் நடப்பு அக்டோபர் மாதத்தில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. (AI Designed Photo: ChatGPT)
Southern Railway2/5

குருவாயூர் எக்ஸ்பிரஸ் சேவை மாற்றம்

குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செலலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) வரும் அக். 11, 13, 15, 20, 22, 25, 27, 29 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (AI Designed Photo: ChatGPT)
Southern Railway3/5

குருவாயூர் எக்ஸ்பிரஸ் எங்கெல்லாம் நிற்கும்? நிற்காது?

ரயில் சேவை மாற்றத்தை தொடர்ந்து மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். (AI Designed Photo: ChatGPT)
Southern Railway4/5

நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் சேவை மாற்றம்

நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (AI Designed Photo: ChatGPT)
Southern Railway5/5

நாகர்கோவில் - கோவை ரயில் எங்கெல்லாம் நிற்கும்? நிற்காது?

ரயில் சேவை மாற்றத்தால் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாலையம் ஆகிய நிலையங்களில் இந்த நாகர்கோவில் - கோவில் ரயில் நிற்காது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். (AI Designed Photo: ChatGPT)
TAGS:
Southern Railway

Trending

  • News
  • Photos
  • Videos
அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

அக்டோபர் 10 டெல்லி போராட்டம்: ஜனநாயகத்தைக் காக்க ஜந்தர் மந்தருக்கு வாருங்கள்! மாணவர் அமைப்பு அழைப்பு

2

Explainer: ரெப்போ விகிதத்தை அதிகரித்த RBI... கடன் EMI-ஐ குறைக்க உதவும் 4 எளிய வழிகள்

3

மாணவியிடம் அத்துமீறிய காங்கிரஸ் எம்எல்ஏ... பேருந்தில் நடந்தது என்ன? ஷாக் வீடியோ

4

5 மாடி கட்டடம் இடிந்து விபத்து... இடிபாடுகளில் சிக்கிய பொதுமக்கள் - டெல்லியில் மீண்டும் ஷாக்

5

Life Certificate: அக்டோபரில் எந்தெந்த ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்? முக்கிய அப்டேட்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.