Southern Railway : தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு புதிய LHB பெட்டிகள் முழுமையாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. LHB பெட்டிகள் என்றால் என்ன?, எந்தெந்த ரயில்களுக்கு மாற்றம் வருகிறது? உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம்.
தெற்கு ரயில்வேயில் உள்ள மதுரை கோட்டம், இரண்டு அதிவிரைவு ரயில்கள் முழுமையாக LHB இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பை இங்கு விரிவாக காணலாம்.
1/5
LHB பெட்டிகள்
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சௌகரியமான பயணத்தை உறுதி செய்யவும், ரயில்களின் தற்போதைய வழக்கமான பெட்டிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வழக்கமான பெட்டிகளுக்கு பதில் அதிநவீன LHB (Linke-Hofmann-Busch) பெட்டிகள் மாற்றப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்படும் அதிநவீன மற்றும் பாதுகாப்பான பயணிகள் ரயில் பெட்டிகளாகும்.
2/5
LHB பெட்டிகள்
LHB பெட்டிகள் ஜெர்மனியைச் சேர்ந்த Linke-Hofmann-Busch என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டடவை. அதிக பாதுகாப்பு, அதிவேகத் திறன், சௌகரியமான பயணம், மேம்பட்ட பிரேக்கிங் வசதி, எடை குறைவு மற்றும் நீளம் அதிகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என LHB பெட்டிகள் என்பது மேம்படுத்தப்பட்ட பெட்டிகளாகும். இவை பஞ்சாப் கபூர்தலா, சென்னை பெரம்பூர் ICF உள்ளிட்ட ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்திற்குட்பட்ட இரண்டு ரயில்களிலும் இந்த மாற்றம் கொண்டவரப்பட உள்ளது.
3/5
சேது அதிவிரைவு ரயில்
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் (ரயில் எண்: 22661/22662) என்ற சேது அதிவிரைவு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து வரும் அக்டோபர் 22ஆம் தேதியில் இருந்தும், ராமேஸ்வரத்தில் இருந்து அக்டோபர் 19ஆம் தேதியில் இருந்தும் LHB பெட்டிகளுடன் இயக்கப்பட இருக்கின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
செந்தூர் அதிவிரைவு ரயில்
சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் (ரயில் எண்: 20605/20606) செந்தூர் அதிவிரைவு ரயில் சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதியில் இருந்தும்; திருச்செந்தூரில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதியில் இருந்தும் LHB பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
5/5
தெற்கு ரயில்வே
LHB பெட்டிகளாக மாற்றப்படுவதை தொடர்ந்து சேது அதிவிரைவு ரயில் மற்றும் செந்தூர் அதிவிரைவு ரயில் ஆகியவை இனி 1 முதல் வகுப்பு ஏசி பெட்டி, 2 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள், 3 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரே ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி, ஒரு லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் உடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.