• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கந்த சஷ்டி விழா: திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. நேர அட்டவணை, முன்பதிவு விவரம் இதோ

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. நேர அட்டவணை, முன்பதிவு விவரம் இதோ

Written ByUmabarkavi K
Published: Nov 13, 2026, 05:46 PM IST|Updated: Nov 13, 2026, 05:49 PM IST
joinshare
Tiruchendur Special Trains: சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எழும்பூர் - திருச்செந்தூருக்கும், தாம்பரம் - நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Tiruchendur Special Trains: இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Chennai Tiruchendur Special Trains1/5

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் தற்போது கந்த சஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 10ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம், நவம்பர் 16ஆம் தேதி முருகன் - தெய்வாணை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Chennai Tiruchendur Special Trains2/5

எழும்பூர் - திருச்செந்தூர் சிறப்பு ரயில்

இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இதனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கும், தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 06006 எண் கொண் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, திருச்செந்தூருக்கு மறுநாள் காலை 4 மணிக்கு சென்றடைகிறது.
Chennai Tiruchendur Special Trains3/5

எழும்பூர் - திருச்செந்தூர் சிறப்பு ரயில் எங்கெல்லாம் நிற்கும்?

இந்த ரயிலில் 8 ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 3 ஸ்லீப்பர் வகுப்புகள் உள்ளன. இந்த ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு துவங்குகிறது.
Chennai Tiruchendur Special Trains4/5

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்

மேலும், நவம்பர் 15ஆம் தேதி இரவு 11 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இரவு 11 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 9.55 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. மாறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 16ஆம் தேதி நண்பல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாள் இரவு 11.40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.
Chennai Tiruchendur Special Trains5/5

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு எப்போது?

இந்த இரு ரயில்களும் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நவம்பர் 13ஆம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு துவங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
TAGS:
Southern Railway

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.