Sukran Peyarchi Palangal: தற்போது, சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தில் உள்ளார். சுவாதியில் சுக்கிரன் பெயர்ச்சி 6 ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். உங்கள் ராசியும் இந்த லிஸ்டில் உள்ளதா?
Venus Transit Effects: சுக்கிரனின் பெயர்ச்சி பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த கிரகத்தின் பெயர்ச்சி நன்மைகளையே தருகிறது. தற்போது, சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கலை, செல்வம், காதல் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாக சுக்கிரன் கருதப்படுகிறார். சுக்கிரனின் சாதகமான நிலை நிதி விவகாரங்கள் மற்றும் உறவுகளில் நன்மைகளைத் தரும். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு கருதப்படுகிறார்.
1/8
சுக்கிரன் பெயர்ச்சி
சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்களுக்கு இது பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
2/8
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிக நன்மைகளை அளிப்பதாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.
3/8
மிதுனம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மிதுன ராசிக்காரர்கள் மீது அதிர்ஷ்டத்தை பொழியும். பல வகைகளில் இந்த பெயர்ச்சி பலனளிப்பதாக இருக்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை முன்னேறும். நிதி நிலை நன்றாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
4/8
கன்னி
ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு பல வித ஆதாயங்களை அளிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதனால் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்குச் சிறந்த முதலீட்டாளர்கள் கிடைக்கக்கூடும்.
5/8
துலாம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குழந்தைகளால் மக்ழிச்சி கிடைக்கும். வாழ்வில் பல அம்சங்களில் சாதகமான சூழல் உண்டாகும். உங்கள் தொழில் வாழ்க்கையில் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான பல்வேறு பணிகள் உங்களுக்கு வழங்கப்படலாம்.
6/8
மகரம்
சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. உங்கள் சமூக அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும்.
7/8
கும்பம்
சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
8/8
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.