• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சுக்கிரன் பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம், பண மழை பொழியும்

சுக்கிரன் பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம், பண மழை பொழியும்

Written BySripriya Sambathkumar
Published: Aug 29, 2026, 16:42 IST|Updated: Aug 29, 2026, 16:51 IST
joinshare
Sukran Peyarchi Palangal: துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மை நடக்கும்? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Sukran Peyarchi Palangal: தற்போது, ​​சுக்கிரன் கன்னி ராசியில் உள்ளார். அங்கு அவர் நீச்ச நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, துலாம் ராசிக்குள் அவரது பிரவேசம் காதல், திருமணம், நிதி நிலை, தொழில், சுகபோகங்கள் மற்றும் சமூக அந்தஸ்து தொடர்பான விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். சுக்கிரன் சுமார் 64 நாட்கள் துலாம் ராசியில் தங்கி, அக்டோபர் 3 அன்று வக்ர நிலையை அடைவார்.

Sukran Peyarchi Palangal1/8

சுக்கிரன் பெயர்ச்சி

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சுக்கிரன் செப்டம்பர் 2, 2026 அன்று துலாம் ராசியில் பெயர்ச்சி ஆவார். சுக்கிரன் துலாம் ராசியின் அதிபதி என்பதால், இங்கு பிரவேசிக்கும்போது அவரது நிலை வலுவாகக் கருதப்படுகிறது. துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் அதிக நன்மகளை அடையபோகும் ராசிகள் பற்றி இங்கே காணலாம்.
Aries2/8

மேஷம்

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். சுக்கிரன் உங்கள் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். திருமண வாழ்க்கையில் இணக்கம் அதிகரிக்கலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண வரன்கள் அமையலாம். தொழில் செய்பவர்களுக்குப் புதிய கூட்டாளியோ அல்லது முக்கிய வாடிக்கையாளரோ கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்.
Gemini3/8

மிதுனம்

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி காதல் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த முயற்சிகளுக்குச் சாதகமாக அமையும். மாணவர்கள் தங்கள் செயல்பாட்டில் முன்னேற்றம் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஊடகம், வடிவமைப்பு மற்றும் உள்ளடக்க உருவாக்கம் துறைகளில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
Libra4/8

துலாம்

துலாம் ராசியில்தான் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், ஆளுமையை மேம்படுத்தவும், சமூகத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தவும் உதவும். வேலை அல்லது தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். உறவுகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். இருப்பினும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.
Sagittarius5/8

தனுசு

சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்கப் புதிய வழிகளைக் கண்டறியலாம். பழைய தொடர்புகள் மூலம் வேலை கிடைப்பதற்கும், தொழில்முறைத் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. பண வரவு அதிகமாகும். சம்பளம் பெறுபவர்களுக்கு ஊதிய உயர்வு அல்லது ஊக்கத்தொகை கிடைக்கலாம்.
Capricorn6/8

மகரம்

பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பது உங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் சுபமான மாற்றங்களைக் குறிக்கிறது. புதிய பொறுப்புகள், பதவி உயர்வு அல்லது முக்கியமான வணிக ஒப்பந்தங்களுக்கான வாய்ப்புகள் உருவாகலாம். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஃபேஷன், ஊடகம், வடிவமைப்பு மற்றும் அழகுசாதனத் துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
Aquarius7/8

கும்பம்

ஒன்பதாம் வீட்டில் சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். உயர்கல்வி, நீண்ட தூரப் பயணம் மற்றும் வெளிநாடு சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆலோசனை உங்கள் தொழிலுக்குப் பயனுள்ளதாக அமையும்.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.