சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் ஒரு கோணத்தில் ஒன்றிணையும்போது லாப திருஷ்டி யோகம் உருவாகும். இந்த யோகத்தால் பயனடையும் 4 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலை 1:17 மணிக்கு சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் ஒரு கோணத்தில் ஒன்றிணைகிறது. அப்போது லாப திருஷ்டி யோகம் உருவாகிறது. இதனால் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் உள்ளிட்ட நான்கு ராசிகள் பலன் பெறும்.
1/7
சூரியன் - செவ்வாய் இணைவு
ஜோதிடத்தின் படி, சூரிய பகவான் ஆன்மாவை குறிக்கும் காரணியாக உள்ளது. செவ்வாய் பகவான் ஆற்றல், தைரியம் ஆகியவற்றின் காரணியாக திகழ்கிறது. அந்த வகையில், சுபமான இந்த கிரகங்கள் இணையும் போது 12 ராசிகளின் வாழ்விலும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் தாக்கம் ஏற்படும். (AI Generated Image : ChatGPT)
2/7
லாப திருஷ்டி யோகம்
அந்த வகையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலை 1:17 மணிக்கு சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் ஒரு கோணத்தில் ஒன்றிணையும்போது லாப திருஷ்டி யோகம் உருவாகிறது. லாப திருஷ்டி யோகம் வழக்கமாக ஒரு சில மணிநேரம் அல்லது ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும். இந்த யோகத்தால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்படையும். யார் யார் இதனால் பயனடைவார்கள் என்பதை இங்கு காணலாம். (AI Generated Image : ChatGPT)
3/7
விருச்சிக ராசி
சூரியன் - செவ்வாய் இணைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வகையில் வருமானம் வந்துசேரும். சம்பளம் உயரும். முதலீடுகளில் இருந்து எதிர்பார்க்காத லாபங்கள் குவியும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். சமூக மதிப்பு உயரும்.
4/7
சிம்ம ராசி
சூரியன் - செவ்வாய் இணைவதால் சிம்ம ராசிக்காரர்களின் வணிகத்தில் சிறப்பான ஒப்பந்தம் அமையும் வாய்ப்பு உண்டாகும். பணியிடத்தில் பணி உயர்வுக்கான வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை உயரும். இந்த நேரத்தில் பொருளாதார நிலையும் முன்னேற்றம் காணும். உங்கள் பார்ட்னர் உடனான உறவும் சிறப்படையும்.
5/7
கடக ராசி
சூரிய பகவான் - செவ்வாய் பகவான் இணைவது கடக ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தை கொணடுவரும். சமூகத்தில் பிரபலமடையவார்கள், நன்மதிப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் குடும்பத்தில் நிறைந்திருக்கும். பணியிடத்தில் எதிரிகளின் சதிகளை முறியடிப்பீர்கள்.
6/7
மேஷ ராசி
சூரியன் - செவ்வாய் பகவான் இணைவதால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் பல கதவுகள் திறக்கும், சாதகம் அதிகமாகும். மேஷ ராசியினர் வாழ்வில் மரியாதையும், பணமும், வசதியும், செழிப்பும் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள்.
7/7
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.