• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சூரியன் பெயர்ச்சி பலன்கள்: 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, வெற்றி மழையில் நனைவார்கள்

சூரியன் பெயர்ச்சி பலன்கள்: 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, வெற்றி மழையில் நனைவார்கள்

Written BySripriya Sambathkumar
Published: Oct 01, 2026, 03:04 PM IST|Updated: Oct 01, 2026, 03:16 PM IST
joinshare
Sun Transit Effects: அக்டோபர் 17ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிகொடுக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Suriyan Peyarchi Palangal: கிரகங்களின் அரசனான சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில், சூரியனின் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் கருதப்படுகிறது. ஜோதிட கணக்கிடுகளின் படி, சூரியன் அக்டோபர் 17 அன்று துலாம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகி நவம்பர் 16 வரை அங்கு இருப்பார். துலாம் ராசியில் சூரியன் 'நீச்ச' நிலையில் (பலவீனமான நிலையில்) இருப்பதாகக் கருதப்படுகிறார். ஆகையால், இந்தப் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Suriyan Peyarchi1/8

சூரியன் பெயர்ச்சி

சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அவர் நவம்பர் 16 வரை அதில் இருப்பார். மாதம் ஒரு முறை சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
Sukran Peyarchi Palangal2/8

சூரியன் பெயர்ச்சி பலன்கள்

அக்டோபர் 17ஆம் தேதி நடக்கவுள்ள சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் பல தடைகள் நீங்கும். அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Leo3/8

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு, சூரியன் பெயர்ச்சி தைரியத்தையும் வீரத்தையும் அதிகரிக்கும். தடைகளை தகர்க்கும் தெளிவு கிடைக்கும். உங்கள் தொழிலில் புதிய சாதனைகளையோ அல்லது வெற்றியையோ அடையலாம். சட்ட விவகாரங்களில் வெற்றி கிடைக்கும் மற்றும் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். வாழ்வில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம்.
Libra4/8

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி பல வித நன்மைகளை அளிக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் வெற்றியும் சாதனைகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சில பணியாளர்கள் புதிய பதவியையோ அல்லது முக்கியமான திட்டத்தின் பொறுப்பையோ பெறலாம்.
Capricorn5/8

மகரம்

துலாம் ராசியில் சூரியன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். இந்த பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன்களைத் தரக்கூடும். இக்காலத்தில் உங்கள் ஆளுமை சிறப்பாக வெளிப்படும். பணியிடத்தில் உங்கள் திறமையையும் தலைமைத்துவப் பண்புகளையும் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். உங்கள் பணியைக் கண்டு மேலதிகாரிகள் ஈர்க்கப்பட்டு உங்களைப் பாராட்டலாம். உங்கள் இலக்குகளில் வெற்றி காண்பீர்கள்; தேங்கிக் கிடந்த பணிகள் வேகம் பெறும்.
Aquarius6/8

கும்பம்

சூரியன் துலாம் ராசியில் பெயர்ச்சி ஆவது கும்ப ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்களைத் தரக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு இக்காலத்தில் வெற்றி கிடைக்கலாம். வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. எதிர்பாராத பண வரவை நீங்கள் பெறலாம். புதிய வருமான வழிகள் உருவாகும், அதே சமயம் ஏற்கனவே உள்ள வழிகள் மூலமாகவும் பணம் வந்து சேரும். பணியில் விரும்பிய முடிவுகளை அடைவது உங்களுக்கு மன நிம்மதியைத் தரும்.
Sun Transit7/8

சூரியன் பெயர்ச்சி

சூரியனின் அருள் பெற தினமும் காலையில், ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் சூரிய காயத்ரியை பாராயணம் செய்யலாம்.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.