தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான இலவச நவீன சைக்கிள் திட்டத்தில், தமிழக அரசின் 9 கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் சைக்கிள்களின் விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
1/5
மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான சைக்கிள்களின் விலையை ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தற்போது குறைத்துள்ளது.
2/5
பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
தவெக அரசின் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டிலுடன் கூடிய நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை செயல்படுத்தும் வகையில் அரசு டெண்டர் கோரியது.
3/5
எத்தனை மாணவர்களுக்கு சைக்கிள்?
இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 5,32,388 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது 2,37,133 மாணவர்களுக்கும் 2,95,255 மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.
4/5
9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் குறைந்த விலை!
ஆரம்பத்தில் மாணவர்களுக்கான சைக்கிளுக்கு ரூ.7,235 என்றும், மாணவிகளுக்கான சைக்கிளுக்கு ரூ.7,476 என்றும் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் விலை நிர்ணயித்திருந்தது. தமிழக அரசு நடத்திய 9 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுவனம் விலையை குறைக்க முன்வந்துள்ளது.
5/5
மாணவர்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
இந்த நிலையில், ஹீரோ சைக்கிள் நிறுவனம் புதிய விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கான சைக்கிள் ரூ.5,260க்கும் மாணவிகளுக்கான சைக்கிள் ரூ.5,130க்கும் கொடுக்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்களுக்கான சைக்கிளில் ரூ.1,975-ம், மாணவிகளுக்கான சைக்கிளில் ரூ.2,346-ம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.276.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.