• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சென்னை மக்கள் கவனத்திற்கு... செப். 19இல் மக்கள் குறைதீர் முகாம் - மிஸ் பண்ணாதீங்க

சென்னை மக்கள் கவனத்திற்கு... செப். 19இல் மக்கள் குறைதீர் முகாம் - மிஸ் பண்ணாதீங்க

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 12:31 AM IST|Updated: Sep 17, 2026, 12:35 AM IST
joinshare
சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வரும் செப்.19ஆம் தேதி அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க நினைவப்பவர், பெயர் நீக்கம் செய்ய நினைப்பவர்கள், முகவரியை மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், கைப்பேசி எண் தொடர்பான சேவைகளை மேற்கொள்ள இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Chennai Corporation1/5

ஒவ்வொரு மாதமும் குறைதீர் முகாம்

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
Chennai Corporation2/5

சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

அதன்படி நடப்பு செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை (செப். 19) அன்று பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளது.
Chennai Corporation3/5

என்னென்ன சேவைகள் கிடைக்கும்...?

இந்த குறைதீர் முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, கைபேசி எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
Chennai Corporation4/5

புகார்களும் அளிக்கலாம்

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Chennai Corporation5/5

மொபைல் கட்டாயம் தேவை

மேலும் இந்த சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் ஒருமுறை கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் உங்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம். செப்டம்பர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் (மதுராந்தகம், தாராபுரம் தவிர்த்து) ரேசன் கடை eKYC நடைமுறைக்கான சிறப்பு முகாம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Chennai

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.