• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /TN Free Cycle Scheme: மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி.. ஹெல்மெட், வாட்டர் பாட்டிலும் வழங்க திட்டம்!

TN Free Cycle Scheme: மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி.. ஹெல்மெட், வாட்டர் பாட்டிலும் வழங்க திட்டம்!

Written ByR Balaji
Published: Oct 24, 2026, 02:14 PM IST|Updated: Oct 24, 2026, 02:19 PM IST
joinshare

2026-27 கல்வியாண்டில் 5.32 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகளை ரூ. 392 கோடி மதிப்பீட்டில் வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
 

Tamil Nadu1/5

தமிழக மாணவர்களுக்கு புதிய சைக்கிள்கள்!

2026-27ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், தண்ணீர் பாட்டிலுடன் கூடிய நவீன மிதிவண்டிகளை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியில் குறைந்த விலையை சமர்ப்பித்த ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu 2/5

ஒரு சைக்கிளின் விலை எவ்வளவு?

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு மிதிவண்டிக்கும் வரிகள் உட்பட விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சைக்கிள்: ரூ. 7,235 மாணவிகளுக்கான சைக்கிள்: ரூ. 7,476
Tamil Nadu3/5

எத்தனை மாணவர்களுக்கு சைக்கிள்கள்?

மாணவர்கள்: 2,37,133 மாணவிகள்: 2,95,255 மொத்தம்: 5,32,388 மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 392 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ரூ. 277 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதல் நிதி தேவைப்படலாம் என தெரிகிறது.
Tamil Nadu4/5

சைக்கிளுடன் என்னென்ன கிடைக்கும்?

மாணவர்களின் பாதுகாப்பையும் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும். சைக்கிள்களில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறும். சைக்கிள்கள் குறிப்பிட்ட தரநிலைகளின்படி தயாரிக்கப்பட வேண்டும். சுமார் 4,500 பள்ளிகளுக்கு தலா 2 பராமரிப்பு கருவிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும். மேலும், சைக்கிள் வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவற்றை சரிசெய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu5/5

எப்போது கிடைக்கும்?

கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 150 நாட்களுக்குள் மிதிவண்டிகள், ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்களை முழுமையாக விநியோகிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2026-27ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியாண்டை நிறைவு செய்வதற்குள் மிதிவண்டிகளை வழங்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

நீலகிரிக்கு ரெட் அலர்ட்... சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்

2

அரசு ஊழியர்களுக்கு அதிரடி எச்சரிக்கை: நேரடியாக மனு அனுப்பினால் ஒழுங்கு நடவடிக்கை!

3

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

4

விவசாயிகளுக்கு மெகா தீபாவளி பரிசு: 50,000 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்க உத்தரவு!

5

மண் சரிவில் சிக்கிய அரசு பஸ்... ஓட்டுநர் பலி - ஊட்டிக்கு செல்ல தடை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.