TN Govt Diwali Holidays: தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் திங்கள்கிழமை அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு சனி, ஞாயிறு, திங்கள் கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
TN Govt Diwali Holidays: தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ளது.
1/5
நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை இந்தாண்டு ஞாயிற்றுகிழமை வருகிறது. எப்போது தீபாவளிக்கு மறுநாள் தமிழக அரசு பொது விடுமுறை அளிப்பது வழக்கம். பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சுலபமாக திரும்பும் நோக்கில் தீபாவளிக்கு மறுநாள் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும் தீபாவளிக்கு மறுநாள் தமிழக அரசு விடுமுறை அறிவிக்குமா என அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
2/5
தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை
இந்த நிலையில் தற்போது தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (நவம்பர் 9) அரசு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மறுநாள் (நவம்பர் 9) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் குஷியில் உள்ளனர்.
3/5
தமிழக அரசுக்கு எழுந்த கோரிக்கைகள்
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இவ்வாண்டு, 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விழாவினை மகிழ்வுடன் கொண்டாடி திரும்புவதற்கு ஏதுவாக. 09.11.2026 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள். பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
4/5
தீபாவளி பண்டிகைக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை
அக்கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள். பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
5/5
நவம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிப்பு
தீபாவளிக்கு பண்டிகைக்கு மறுநாள் விடுத்த அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளானது, செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act. 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள், சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.