நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மாற்றம் குறித்து இந்திய மூத்த வீரர் அஜிங்கயா ரஹானே விரிவாக பேசி உள்ளார். இதுகுறித்து விரிவாக இந்த புகைப்படத் தொகுப்பில் அறியலாம்.
இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் சிராஜ், ஜடேஜா சேர்க்கப்படாதது அதிகளவில் பேசப்பட்டது. இரண்டாவது போட்டியில் சிராஜ் நிச்சயம் சேர்க்கப்படலாம். அவர் ஏன் சேர்க்கப்பட வேண்டும்?, யாருக்கு பதில் சிராஜ் சேர்க்கப்பட வேம்டும் என்பதை ரஹானே விளக்கி உள்ளார்.
1/5
இரண்டாவது டெஸ்ட் போட்டி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 27ஆம் தேதி அன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற இருக்கிறது. வெல்லிங்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால், 2வது போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இரண்டாவது போட்டி வெல்லும் அணி தொடரை கைப்பற்றும், மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பையும் பெறும்.
2/5
பிளேயிங் லெவன் மாற்றம் வருமா?
முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோரை பிளேயிங் லெவனில் சேர்க்காதது விமர்சனத்திற்கு உள்ளானதை தொடர்ந்து 2வது போட்டியில் என்னென்ன மாற்றங்கள் வர இருக்கிறது என்ற எதிர்ப்பார்ப்பும் எகிறி உள்ளது.
3/5
ரஹானேவின் முக்கிய பாயிண்ட்
இதுகுறித்து இந்திய மூத்த வீரர் அஜிங்கயா ரஹானே Sony Sports-ல் பேசுகையில், "இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த காம்பினேஷன் சரியில்லை. முதல் இன்னிங்ஸிலேயே உங்களால் டெஸ்ட் போட்டியை வென்றுவிட முடியாது. 4வது நாளிலும், 5வது நாளிலும் விக்கெட்டை வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் உங்களுக்கு தேவை. இந்தியாவுக்கு வெளியே நீங்கள் 25-30 ரன்களை குறைவாக அடித்தாலும் பரவாயில்லை" என தெரிவித்துள்ளார்.
4/5
2வது இன்னிங்ஸ் ரொம்ப முக்கியம்
ரஹானே மேலும், "ஏனென்றால் பந்துவீச்சுக்கு சாதகமான சூழலில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் தடுமாறவே செய்யும். இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் தட்டையான பின்னர், கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர் யார் என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும்" என பேசி உள்ளார்.
5/5
பும்ரா உடன் சிராஜ் வேண்டும்
சிராஜை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்பது ரஹானேவின் நிலைப்பாடு. இதுகுறித்து அவர், "இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதல் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது, அவர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ஜஸ்பிரித் பும்ரா உடன் உங்களுக்கு மற்றொரு அனுபவ பந்துவீச்சாளர் தேவை" என தெரிவித்துள்ளார். இதனால், சிராஜ் நிச்சயம் இந்திய அணிக்கு தேவை என்றும்; அவர் சிறப்பாக பங்களிப்பார் என்றும் ரஹானே தெரிவித்துள்ளார். அன்சுல் கம்போஜ் அல்லது ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதில் முகமது சிராஜை சேர்க்கலாம் என ரஹானே தெரிவித்துள்ளார்.