Tirupati Dwara Darshan 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தரிசன டிக்கெட் முன்பதிவு தேதியை வெளியிட்டுள்ளது.
Tirupati dwara Darshan 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 20 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
1/5
திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வைகண்ட ஏகாதசி விழாவின் போது 10 நாட்களும் சொர்க்க வாசல் அல்லது வைகுண்ட துவாரம் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்.
2/5
திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம் 2026
2026ஆம் ஆண்டுக்கான திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 20ஆம் தேதி துவங்கி டிசம்பர் 29ஆம் தேதி வைகுண்ட துவாரம் அடைக்கப்படுகிறது. வைகுண்ட துவார தரிசன டிக்கெட் முன்பதிவு நவம்பர் 28ஆம் தேதியான இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. வைகுண்ட துவார தரிசன டிக்கெட் முன்பதிவு டிசம்பர் 5ஆம் தேதி நிறைவடைகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
3/5
வைகுண்ட துவார தரிசன டிக்கெட் முன்பதிவு தேதி
நவம்பர் 30ஆம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெளியாகிறது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணி வரை வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய முதல் 2 நாட்களுக்கான ஸ்லாட்டட் சர்வ தரிசன டோக்கன் லக்கி டிப் முன்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி பகல் 3 மணிக்கு லக்கி டிப் சர்வ தரிசன டோக்கன் வெளியிடப்படும்.
4/5
வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
மேலும், டிசம்பர் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு தாதல தரிசன டிக்கெட் கோட்ட வெளியிடுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. எனவே, பக்தர்கள் ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
5/5
விஐபி தரிசனம், ரூ.300 தரிசனம் ரத்து
வைகுண்ட ஏகாதசி தினமாக டிசம்பர் 20ஆம் தேதி மற்றும் துவாதசி நாளான டிசம்பர் 21ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், முதல் இரண்டு நாட்களுக்கான சர்வ தரிசன டோக்கன் ஆன்லைன் லக்கி டிக் வழியாக மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்படடுள்ளது.