• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /புதுச்சேரி
  • /வேறு மாநிலத்தவருக்கு அட்ரெஸ் கொடுக்க கூடாது! மீறினால் ரேஷன் சலுகை கட்..புதுவை அரசு அதிரடி

வேறு மாநிலத்தவருக்கு அட்ரெஸ் கொடுக்க கூடாது! மீறினால் ரேஷன் சலுகை கட்..புதுவை அரசு அதிரடி

தமிழ்நாடு உள்ளிட்ட, பிற மாநிலங்களை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் வாகனங்கள் வாங்க, புதுச்சேரி முகவரி கொடுத்திருந்த 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரேஷன் கார்ட் பயனாளர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 28, 2026, 13:47 IST|Updated: Nov 28, 2026, 13:55 IST
joinshare
வேறு மாநிலத்தவருக்கு அட்ரெஸ் கொடுக்க கூடாது! மீறினால் ரேஷன் சலுகை கட்..புதுவை அரசு அதிரடி
Image Credit: Puducherry | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

2

வேறு மாநிலத்தவருக்கு அட்ரெஸ் கொடுக்க கூடாது! மீறினால் ரேஷன் சலுகை கட்..புதுவை அரசு அதிரடி

3

ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 6 ராசிகளுக்கு அட்டகாசம்!! ராகு, கேது அருளால் கேட்டது கிடைக்கும்

4

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது... டிச.11 வரை சிறை - கவனம் பெறும் POSH சட்டம் என்றால் என்ன? Explained

5

Explainer: தொகுதி மறுவரையறை மசோதாவின் முக்கிய அம்சமாக PoK!! இந்தியா போடும் மாஸ்டர் பிளான், கடுப்பாகும் பாகிஸ்தான்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மத்திய அரசு எடுத்திருக்கும் கிடுக்கிப்பிடி நடவடிக்கையால், தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாகனம் வாங்க முகவரி கொடுத்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ரேஷன் அட்டைதாரர்கள்:

நாட்டில் உள்ள, ஏழை மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் சிவப்பு நிற ரேஷன் கார்டு பயன்பாட்டாளர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்த சலுகைகளானது, தகுதியுடைய பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்களை பல்வேறு அரசு தரவுகளுடன் ஒப்பிட்டு, சரிபார்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரியம், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சங்க வாரியம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் வரி செலுத்துவோரின் விவரங்களும், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் இருக்கும் நான்கு சக்கர வக உரிமையாளர்களின் விவரங்களும், ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில்,  தகுதியற்றவர்களாக கருதப்படும் ரேஷன் கார்டுகளை முன்னுரிமை பட்டியலில் இருந்து முன்னுரிமையற்ற பட்டியலுக்கு மாற்றி, அதற்கான இலவச பயன்களை நிறுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | புதுச்சேரி செய்திகள்: கார்த்திகை தீபம், செவிலியர் போராட்டம், கனமழை வெள்ளம் - முழு விவரம்

சிக்கல் என்ன..?

மத்திய அரசின் தற்போதைய தரவுகள் அடிப்படையில், முதற்கட்டமாக புதுச்சேரியில் 19,349 ரேஷன் கார்டுகள் அடையாளம் காணப்பட்டன. இதிலிருந்து, இறந்தவரகளின் ஒற்றை உறுப்பினர் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதுடன், இரட்டை பதிவுகளும் களையப்பட்டன. இதையடுத்து, எஞ்சிய 15,944 ரேஷன் கார்டுகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், கள ஆய்வின் அடிப்படையில் 6,879 குடும்பங்களின் ரேஷன் கார்டுகள் முன்னுரிமையற்ற பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.

சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் வாகன உரிமையாளர்கள் தரவுகளை ஒப்பிட்டு பார்த்த போதுதான், புதுச்சேரி மகக்ளுக்கு புதிய சிக்கல் உருவாகியிருப்பது தெரிந்தது. புதுச்சேரியில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பதாக, மொத்தம் 7,070 ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு, அவை கள ஆய்வில் இருக்கின்றன. இந்த ரேஷன் கார்டுகளும் முன்னுரிமையற்ற பட்டியலுக்கு மாற்றப்படலாம் எனும் அச்சம் எழுந்துள்ளது.

ஏன் இப்படி செய்கிறார்கள்..?

தமிழ்நாடு உள்ளிட்ட, பிற மாநில்ங்களில் வாகனங்களுக்கான விலையும், வரிகளும் அதிகமாக இருப்பதாக பலர் கருதுகின்றனர். இதையடுத்து, சிலர் புதுச்சேரியில் வாகனம் வாங்குவதற்காக, தனக்கு தெரிந்த  உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முகவரியை பயன்படுத்திக்கொள்கின்றனர். சுருக்கமாக சொல்லப்போனால், சென்னையில் இருக்கும் தினேஷ் என்பவர், வாகனம் வாங்க ஆசைப்பட்டு, இங்கு வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணி, புதுச்சேரியில் உள்ள தன்னுடைய நண்பர் ரமேஷின் முகவரியை பயன்படுத்தி, கார் வாங்கிக்கொள்கிறார்.

இதனால் எந்த பயனும் இல்லை..

புதுச்சேரி முகவரி கொடுத்தவர்களுக்கு வாகனத்தின் உரிமையோ, அதனால் கிடைக்கும் பொருளதார பலனோ இல்லாத நிலையிலும், அவர்களுக்கு பெயர் மற்றும் முகவரி வாகனப்பதிவில் இடம்பெற்றிருக்கிறது.

இப்படி தங்கள் முகவரிகளை கொடுப்பவர்கள், பிற மாநிலத்தவர்களுக்கு முகவரி கொடுத்ததற்காக புதுச்சேரியை சேர்ந்த குடும்பங்கள் தங்களுக்கு கிடைத்து வந்த உணவு பாதுகாப்பு சலுகைகளை இழக்க வேண்டுமா..? எனும் கேள்வி எழுந்துள்ளது.

கிளம்பிய எதிர்ப்பு..

குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் இது குறித்து பேசினர். அப்போது வாகன உரிமையாளர் விவகாரங்களை மட்டும் அடிப்படையாக கொண்டு, ரேஷன் கார்டுகளை முன்னுரிமையற்ற கார்டுகளாக மாற்றுவதற்கு புதுச்சேரி அரசு எதிர்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர்சிவகொழுந்து, மத்திய அரசிடம் முறையிட்டிருக்கிறார்.

வாகன உரிமை தொடர்பான தகவல்களை மட்டுமே வைத்து, ரேஷன் கார்டுகளின் வகையை மாற்ற நடவடிக்கை எடுக்கும் முன்பு, சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அவர்களின் விளக்கங்களை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

Add Zee News as a Preferred Source
TAGS:
Puducherry