• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மக்களுக்கு மின்சாரக் கட்டணம் 3-4 மடங்கு வரை உயர்ந்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

Written BySudharsan G
Published: Nov 28, 2026, 13:52 IST|Updated: Nov 28, 2026, 13:56 IST
joinshare
15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்
Image Credit: Madurai EB Bill Shock | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

15 நாட்கள் வீட்டிலேயே இல்லை... ஆனால் ரூ.14,000 கரண்ட் பில் - மதுரை மக்களுக்கு ஷாக்

2

வேறு மாநிலத்தவருக்கு அட்ரெஸ் கொடுக்க கூடாது! மீறினால் ரேஷன் சலுகை கட்..புதுவை அரசு அதிரடி

3

ராகு, கேது பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் 6 ராசிகளுக்கு அட்டகாசம்!! ராகு, கேது அருளால் கேட்டது கிடைக்கும்

4

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது... டிச.11 வரை சிறை - கவனம் பெறும் POSH சட்டம் என்றால் என்ன? Explained

5

Explainer: தொகுதி மறுவரையறை மசோதாவின் முக்கிய அம்சமாக PoK!! இந்தியா போடும் மாஸ்டர் பிளான், கடுப்பாகும் பாகிஸ்தான்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai District News Updates: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

மதுரை சோழவந்தான் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு மின்சாரக் கட்டணம் 3, 4 மடங்கு வரை திடீரென அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதேநேரத்தில், மின்வாரியம் இந்த அதிக மின் கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்க மின்வாரிய பணியாளர்களுக்கு அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் நேரம்! ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன் தகவல்!

மின் கட்டணத்தால் அவதிப்படும் கூலி தொழிலாளி

உதாரணத்திற்கு, ​சாதாரண கூலி தொழிலாளியான செந்தில் ராம் என்பவர் தனக்கு அதிகளவில் மின் கட்டணம் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். ​இவரது மூத்த மகன் 12ஆம் வகுப்பும், இளைய மகன் 10ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு மின் இணைப்புக்கு ரூ.5,862 மற்றும் மற்றொரு மின் இணைப்புக்கு ரூ.8,114 என மின்வாரிய அதிகாரிகள் கட்டணம் விதித்துள்ளனர்.

வழக்கத்திற்கும் மாறாக அளவுக்கு அதிகமான மின்சார கட்டணம் வந்துள்ளதாகவும், இதை கட்டினால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும்; தனது மகன்களின் கல்வியும் பாதிக்கப்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அடுத்து என்ன செய்வது என்றே தனக்கு தெரியவில்லை என்றும் கூலித் தொழியான அவர் வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இப்படியிருக்க, இவ்வளவு பெரிய தொகையை உடனடியாகக் கட்டாவிட்டால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவதாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாகவும்; மின்சார வாரியம் தொடர்ந்து கட்டாயப்படுத்தினால் தான் தற்கொலை செய்து கொள்வதை தவிற வேறு வழி இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். இவரது மாத ஊதியமே ரூ.20 ஆயிரம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

15 நாட்கள் வீட்டிலேயே இல்லை...

அதேபோல், சோழவந்தான் 14வது வார்டு பகுதியைச் சேர்ந்த செந்தில்ராம் என்பவரும் இதேபோல் அதிக மின் கட்டணத்தால் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார். ஒரே வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன.

கடந்த காலங்களில் சுமார் ரூ.200 முதல் ரூ.500 வரை மட்டுமே மின்கட்டணம் வந்ததாக அவர் கூறுகிறார். அப்படியிருக்க, சில தினங்களுக்கு முன்பு 15 நாட்களுக்கும் மேலாக தாங்கள் வீட்டில் இல்லாமல் வெளியூர் சென்றிருந்ததாகவும்; இந்த முறை மின்கட்டணம் மிகவும் குறைவாகவே வரும் என அவர்கள் எதிர்பார்த்து இருந்ததாகவும் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் தீபம்: தவெக அரசு செய்ய வேண்டியது இதுதான் - வழக்கறிஞர் வலியுறுத்தல்

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் இரு மின் இணைப்புகளுக்கும் சேர்த்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் மின் கட்டணம் வந்ததால் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நடவடிக்கை எடுக்குமா மின் வாரியம்?

இவர்களுக்கு மட்டுமின்றி சோழவந்தான் பகுதியில் உள்ள பாமர மக்கள் பலரும் இதுபோன்று மின்கட்டண பல மடங்கு உயர்ந்து உள்ளதால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே, மின்கட்டண குளறுபடிகள் தொடர்பாக உடனே மின்வாரிய அதிகாரிகள் தலையிட்டு பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, அதிகாரிகளின் அணுகுமுறை குறித்தும் மின்சார வாரியம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிகாரிகள் யாரும் தவறு செய்திருக்கும்பட்சத்தில் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் CRPF... பிரதமர் பதிவு முதல் கம்யூனிஸ்ட்களின் பேரணி வரை - பரபரக்கும் அரசியல் களம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu