• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /UG படிக்க ரூ.50,000 உதவித்தொகை.. தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. யாரெல்லாம் பெறலாம்?

UG படிக்க ரூ.50,000 உதவித்தொகை.. தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு.. யாரெல்லாம் பெறலாம்?

Written ByUmabarkavi K
Published: Nov 13, 2026, 01:50 PM IST|Updated: Nov 13, 2026, 01:56 PM IST
joinshare
TN Govt Education Scholorship: தமிழக அரசு ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு MBBS, BE, LAW படிக்க ரூ.50,000 உதவித்தொகை பெற டிசம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

TN Govt Education Scholorship: இத்திட்டத்தில் மருத்துவம், பிஇ, சட்டம் படிக்க ரூ.50,000, டிப்ளமோவுக்கு ரூ.15000 வழங்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
 

TN Govt scholorship1/5

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் / ஓய்வு பெற்ற /பணியில் இருக்கும் போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு (ஒரு ஆசிரியருக்கு ஒரு குழந்தைக்கு மட்டும்) நிபந்தனைகளின் அடிப்படையில், தொழிற்கல்வி பட்டப்படிப்பு(UG course) பயில ரூ.50,000/- மற்றும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு (Diploma course) பயில 15.000/- ஆனது தேசிய ஆசிரியர் நல நிதியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
TN Govt scholorship2/5

எந்தெந்த படிகளுக்கு உதவித்தொகை?

தொழிற்கல்வி பட்டப்படிப்புகளில் (UG Course) எம்பிபிஎஸ், பிடிஎஸ், கால்நடை மருத்துவம், பிஎஸ்சி விவசாயம், பிஎஸ்சி நர்சிங், சட்டம் ஆகிய படிப்புகளுக்கு ரூ.50,000 வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கான தொழிற்கல்வி பட்டயப்படிப்புகளுக்கு ரூ.1500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Govt scholorship3/5

ரூ.50,000 உதவித்தொகை பெற டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற டிசம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலக்கெடுவுக்கு பிறகு கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் மாணவரின் வங்கி கணக்கு எண், வங்கி புத்தகத்தின் முதல் பக்க நகல் இணைக்க வேண்டும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
TN Govt scholorship4/5

உதவித்தொகை யாரெல்லாம் பெறலாம்?

இத்திட்டத்தில் உதவித்தொகை பெற ஒரு ஆசிரியரின் ஒரு குழந்தைக்கு ஒரு முறை மட்டும் தான். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நிறுவனத்தில் தான் படிக்க வேண்டும். முதலாமாண்டு பயின்று தேர்வுகளில் நிலுவையின்றி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தில் உள்ள அனைத்து கலங்களும் தமிழில் முழுமையாக, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். பெற்றோரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.7,20,000/- மிகாமல் இருக்க வேண்டும்.
TN Govt scholorship5/5

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

ஆசிரியரல்லாத பணியாளர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. ஏற்கனவே ரூ.50,000 பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தில் கடைசியாக தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். தந்தை / தாய் பணி விவரம், ஊதிய சான்று விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
TAGS:
Education

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.