• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பக்தர்களுக்கு ஷாக்! கோயில் பிரசாதம் விலை உயர்வு.. நவம்பர் 1 முதல் அமல்

பக்தர்களுக்கு ஷாக்! கோயில் பிரசாதம் விலை உயர்வு.. நவம்பர் 1 முதல் அமல்

Written ByUmabarkavi K
Published: Oct 27, 2026, 05:27 PM IST|Updated: Oct 27, 2026, 05:38 PM IST
joinshare
TNHRCE Temple Prasadam Price Hike: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNHRCE Temple Prasadam Price Hike: பழனி முருகன் கோயில் உட்பட முக்கிய  கோயில்களில்  பிரசாதங்களின் விலை நவம்பர் 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. 
 

TNHRCE Temple1/5

அறநிலையத்துறை கோயில்களில் பிரசாத விலை உயர்வு

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரும்பாலான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அறநிலையத்துறை எடுத்து வருகிறது. மேலும், கோயில்களில் அதிரடி கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில், அறநிலையத்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நவம்பர் 1 முதல் கோயில்களில் பிரசாதங்களின் விலை உயரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNHRCE Temple2/5

பிரசாதங்களில் தரமில்லை என பக்தர்கள் புகார்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பிரசாத ஸ்டால்கள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, வெளியிடங்களில் தயாரிக்கப்பட்டு வந்தன. எங்கு, எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. தரமில்லை என பக்தர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். இதனால், அரசு 10 வகை பொதுவான பிரசாதங்களுக்கு *Uniform Quality, Quantity and Price* என்ற மாஸ்டர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
TNHRCE Temple3/5

நவம்பர் 1 முதல் பிரசாதங்களில் விலை உயர்வு

இனி கோயில் வளாகத்திலேயே, ஆவின் நெய் மற்றும் கூட்டுறவு கடை பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்த 10 வகை பிரசாதங்களை தவிர, மற்ற பிரசாதங்களின் விலை நவம்பர் 1 முதல் உயர்த்தப்படும் என அறநிலையத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.
TNHRCE Temple4/5

எந்தெந்த பிரசாதங்களின் விலை உயர்வு?

அதன்படி, 50 கிராம் லட்டு ரூ.20, 50 கிராம் தேன்குழல் ரூ.25, 50 கிராம் மிளகுவடை ரூ.20, 50 கிராம் அதிரசம் ரூ.20, 150 கிராம் புளியோதரை ரூ.20, 150 கிராம் சர்க்கரை பொங்கல ரூ.20, பஞ்சாமிர்தம் 250 கிராம் ரு.30, அப்பம் ரூ.20, 80 கிராம் தேன் திறனை மாவு ரூ.15, 100 கிராம் அரவணை ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
TNHRCE Temple5/5

பிரசாதங்களின் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

பழனி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்று ஒவ்வொரு கோயிலுக்கும் உரிய சிறப்பு வாய்ந்த, தனித்தன்மை கொண்ட பிரசாதங்கள் இருந்தால், அந்தந்த திருக்கோயில்கள் தனியாக செலவு கணக்கு தயாரித்து இணை ஆணையர் / கூடுதல் ஆணையர் / ஆணையர் அளவில் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம் எனவும், பேக்கிங் கவர்களில் உற்பத்தியாளர் பெயர், எடை, தயாரிப்பு தேதி, MRP கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெய், எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

2

ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

3

இஸ்ரேல் தேர்தல் 2026: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா... ஏன்? காரணம் என்ன? -Explained

4

60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

5

YouTube-க்கு நேரடி போட்டி... 90 நிமிட Podcast வீடியோக்களை சோதிக்கும் Instagram!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.