Today Rasi Palan: இன்று (நவம்பர் 15, 2026) ஞாயிற்றுக்கிழமை, ஜப்பசி 29 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
1/13
மேஷம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
அஸ்வினி : ஆதாயகரமான நாள்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
2/13
ரிஷபம்
தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். தன வருவாயில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிர்பாராத ஆரோக்கிய செலவுகள் வரும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். மனதில் எதிர்கால சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : ஏற்ற இறக்கமான நாள்.
ரோகிணி : நிதானத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : சேமிப்புகள் மேம்படும்.
3/13
மிதுனம்
மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு இடையே வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூக சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : வேறுபாடுகள் நீங்கும்.
புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
4/13
கடகம்
மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். வீடு, வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் உருவாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
புனர்பூசம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூசம் : ஆதரவுகள் மேம்படும்.
ஆயில்யம் : திருப்தியான நாள்.
5/13
சிம்மம்
எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த பணிகளில் லாபம் மேம்படும். முயற்சிக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மகம் : வரவுகள் உண்டாகும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
6/13
கன்னி
வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோக விஷயங்களில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : ஆதரவு அதிகரிக்கும்.
அஸ்தம் : குழப்பங்கள் விலகும்.
சித்திரை : பொறுமை வேண்டும்.
7/13
துலாம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் புது விதமான ஆசைகள் மற்றும் விருப்பங்கள் உருவாகும். மனை தொடர்பான இழுபறிகள் விலகும். எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
சித்திரை : நெருக்கடியான நாள்.
சுவாதி : புரிதல் அதிகரிக்கும்.
விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.
8/13
விருச்சிகம்
மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். விற்பனையில் மாற்றமான சூழல்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப தேடல்கள் அதிகரிக்கும். கணித துறைகளில் ஆர்வம் ஏற்படும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். போக்குவரத்தில் இருந்த தாமதங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
விசாகம் : எதிர்ப்புகள் விலகும்.
அனுஷம் : ஆர்வம் ஏற்படும்.
கேட்டை : தாமதங்கள் குறையும்.
9/13
தனுசு
தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். ஆன்மீகப் பணியில் ஆர்வம் உண்டாகும். தடைபட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உழைப்புக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : புரிதல் ஏற்படும்.
பூராடம் : லாபம் உண்டாகும்.
உத்திராடம் : துரிதம் ஏற்படும்.
10/13
மகரம்
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். முன்கோபத்துடன் செயல்படுவது நன்மதிப்பை உருவாக்கும். பூர்வீக சொத்துக்களில் பொறுமை வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.
திருவோணம் : விரயங்கள் ஏற்படும்.
அவிட்டம் : பொறுமை வேண்டும்.
11/13
கும்பம்
வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். உறவினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆவண விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். பற்கள் தொடர்பான இன்னல்கள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் பயணற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : அனுபவங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.
12/13
மீனம்
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். சிந்தனைபோக்கில் சில மாற்றம் ஏற்படும். புது வகையான உணவுகளை உண்பதில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
பூரட்டாதி : புதுமையான நாள்.
உத்திரட்டாதி : விவேகம் வேண்டும்.
ரேவதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.