• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /Today Rasi Palan October 05: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று 12 ராசிகளுக்கு எப்படி?

Today Rasi Palan October 05: மேஷம் முதல் மீனம் வரை.. இன்று 12 ராசிகளுக்கு எப்படி?

Written ByR Balaji
Published: Oct 05, 2026, 06:03 AM IST|Updated: Oct 05, 2026, 06:08 AM IST
joinshare

Today Rasi Palan October 05: இன்று (அக்டோபர் 05, திங்கள்கிழமை) புரட்டாசி 18 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் இன்றைய பலன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம். 
 

Today Rasi Palan1/13

மேஷம்

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயமாக அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : குழப்பம் நீங்கும். பரணி : வரவுகள் கிடைக்கும். கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய விஷயங்களில் சாதகமாக அமையும். வெளியூர் பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத பயணங்களால் வாய்ப்புகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கிருத்திகை : இன்னல்கள் குறையும். ரோகிணி : சிந்தனைகள் மேம்படும். மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
Today Rasi Palan3/13

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவுகளில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். திருவாதிரை : மாற்றம் உண்டாகும். புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
Today Rasi Palan4/13

கடகம்

கலை பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனம் விட்டு பேசுவதால் அமைதி உண்டாகும். எதிலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படவும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தொழில் நுட்ப தேடல் உண்டாகும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கி தரும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் புனர்பூசம் : புதுமையான நாள். பூசம் : நிதானம் வேண்டும். ஆயில்யம் : தேடல் உண்டாகும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். வர்த்தக செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மகம் : மாற்றம் ஏற்படும். பூரம் : கவனம் வேண்டும். உத்திரம் : அலைச்சல் அதிகரிக்கும்.
Today Rasi Palan6/13

கன்னி

மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவுகளில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து காணப்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகள் மூலம் ஆதாயம் உண்டாகும். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திரம் : புத்துணர்ச்சி நாள். அஸ்தம் : ஒத்துழைப்பான நாள். சித்திரை : ஆதரவான நாள்.
Today Rasi Palan7/13

துலாம்

வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சிந்தனைத் திறன் மேம்படும். குடும்பத்தினருடன் பயணங்கள் சென்று வருவீர்கள். நீண்டகாலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : அனுபவம் கிடைக்கும். சுவாதி : சாதகமான நாள். விசாகம் : முன்னேற்றமான நாள்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

நிர்வாகத் திறமை வெளிப்படும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் சார்ந்த பயணம் கைகூடும். முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் விசாகம் : திறமை வெளிப்படும். அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். கேட்டை : கவலைகள் குறையும்.
Today Rasi Palan9/13

தனுசு

செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். கணவன்-மனைவியிடையே அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் கவனக் குறைவு ஏற்படலாம். விளையாட்டு போட்டிகளில் சில மாற்றமான அனுபவம் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் தேவையற்ற செயல்களை தவிர்ப்பது நல்லது. பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியமாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் மூலம் : பொறுமையுடன் செயல்படவும். பூராடம் : மாற்றமான நாள். உத்திராடம் : முதலீடுகளில் கவனம்.
Today Rasi Palan10/13

மகரம்

வாழ்க்கை துணைவரின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். செயல்பாடுகளில் சில மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பிடித்த பொருள்களை வாங்கி முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உணவு விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம் உத்திராடம் : அனுகூலமான நாள். திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். அவிட்டம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
Today Rasi Palan11/13

கும்பம்

எதிர்பாராத உறவினர் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். கல்வி பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். சதயம் : பாராட்டுகள் கிடைக்கும். பூரட்டாதி : ஆதரவுகள் மேம்படும்.
Today Rasi Palan12/13

மீனம்

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். உத்தியோகப் பணிகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும். உத்திரட்டாதி : சாதகமான நாள். ரேவதி : ஆதரவுகள் மேம்படும்.
Today Rasi Palan13/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
நடுவானில் மரண பயம்: 34,000 அடியில் கோடரி தாக்குதல்... 170 பயணிகள் உயிர் தப்பியது எப்படி? Flydubai FZ1073 Explainer!

நடுவானில் மரண பயம்: 34,000 அடியில் கோடரி தாக்குதல்... 170 பயணிகள் உயிர் தப்பியது எப்படி? Flydubai FZ1073 Explainer!

2

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்

3

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

4

அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்

5

அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.