Today Rasi Palan: புரட்டாசி 23, அக்டோபர் 10, 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும்? யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும், யாருக்கு கவனம் தேவை, அதிர்ஷ்ட எண், நிறம் மற்றும் திசை உள்ளிட்ட முழு ராசிபலன்களைப் பார்க்கலாம்!
1/13
மேஷம்
செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். காதணிகள் சார்ந்த செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : இலக்குகள் பிறக்கும்.
2/13
ரிஷபம்
மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கௌரவப் பதவிகள் மூலம் பொறுப்புகள் அதிகரிக்கும். தனவரவுகள் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடமான சிந்தனைகள் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
3/13
மிதுனம்
மனதில் எண்ணிய எண்ணம் நிறைவேறும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : பொறுப்புகள் கிடைக்கும்.
4/13
கடகம்
கணவன்-மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் விலகும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம் : தடைகள் விலகும்.
ஆயில்யம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
5/13
சிம்மம்
பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். உதவிகளால் அலைச்சல்கள் நேரிடலாம். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். சிறுதூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றங்கள் நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களிடம் கனிவுடன் செயல்படவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : சோர்வுகள் நீங்கும்.
பூரம் : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரம் : கருத்துக்களில் கவனம்.
6/13
கன்னி
வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். சிறுதூரப் பயணம் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தைரியம் கூடும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திரம் : ஆதரவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : இன்னல்கள் குறையும்.
சித்திரை : திருப்பங்கள் ஏற்படும்.
7/13
துலாம்
தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இடம் மாற்ற சிந்தனைகள் உண்டாகும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்த கட்டுப்பாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
சுவாதி : தடைகளை அறிவீர்கள்.
விசாகம் : கட்டுப்பாடுகள் குறையும்.
8/13
விருச்சிகம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த உயரதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலம் தொடர்பான பயணங்கள் மற்றும் சிந்தனைகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
9/13
தனுசு
வீடு மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். பேசுவன்மை மூலம் காரிய சித்தி உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவாக செயல்படுவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : தெளிவுகள் ஏற்படும்.
உத்திராடம் : உதவி கிடைக்கும்.
10/13
மகரம்
வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக்கொள்ளவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
11/13
கும்பம்
பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்ற செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படவும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.
சதயம் : பொறுமையுடன் செயல்படவும்.
பூரட்டாதி : தாமதம் ஏற்படும்.
12/13
மீனம்
மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் உதவிகள் சாதகமாகும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
உத்திரட்டாதி : ஆதரவு மேம்படும்.
ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.