Today Rasi Palan October 27: இன்று (அக்டோபர் 27, செவ்வாய்கிழமை) ஐப்பசி 10ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்களுக்கான இன்றைய பலன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
1/13
மேஷம்
எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துகளால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
அஸ்வினி : உதவிகள் சாதகமாகும்.
பரணி : வாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : கவலைகள் குறையும்.
2/13
ரிஷபம்
வழக்கு தொடர்பான விஷயங்களில் புரிதல்கள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இரவு நேர பணிகளால் ஆதாயம் உண்டாகும். தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
கிருத்திகை : புரிதல்கள் ஏற்படும்.
ரோகிணி : ஆதாயகரமான நாள்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
3/13
மிதுனம்
சுரங்கப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் கைக்கூடும். எதிர்பாராத புதுமையான சூழல்கள் உண்டாகும். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கலைகள் மீதான ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : திருப்தியான நாள்.
புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
4/13
கடகம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பிற இன மக்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பொதுவாழ்வில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : தடைகள் விலகும்.
5/13
சிம்மம்
எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : விவேகம் வேண்டும்.
6/13
கன்னி
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத சில பயணம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.
சித்திரை : மந்தமான நாள்.
7/13
துலாம்
சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : ஒற்றுமை பிறக்கும்.
சுவாதி : அறிமுகம் ஏற்படும்.
விசாகம் : சோர்வுகள் நீங்கும்.
8/13
விருச்சிகம்
சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் உண்டாகும். சொத்து விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். நீண்ட தூர பயணங்கள் ஈடேறும். கால்களில் சிறு சிறு வழிகள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆசைகள் நிறைவேறுவதில் இருந்த தடைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : பயணங்கள் ஈடேறும்.
கேட்டை : தடைகள் குறையும்.
9/13
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
மூலம் : ஆர்வம் ஏற்படும்.
பூராடம் : செல்வாக்கு மேம்படும்.
உத்திராடம் : மாற்றமான நாள்.
10/13
மகரம்
சுப காரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். உணவுத் துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களால் மன அமைதி ஏற்படும். அரசு வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திராடம் : தெளிவுகள் உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
11/13
கும்பம்
குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். மனதளவில் இருந்த தயக்கங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.
சதயம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : துரிதம் ஏற்படும்.
12/13
மீனம்
ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். வீடு மாற்றம் சிந்தனை கைக்கூடும். பழைய சிக்கல்கள் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : சிக்கல் குறையும்.
ரேவதி : புரிதல் வேண்டும்.
13/13
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.