மாதந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம் என்பதே பெரும்பாலானோருக்கு இருக்கும் முதன்மையான குழப்பம். அதிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா அல்லது பணத்தை பங்குச் சந்தையில் போடலாமா என்பதும் பலரின் கேள்வியாக இன்றும் இருந்து வருகிறது.
பங்குச்சந்தை முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு சிறந்த ஆப்ஷன் என்பதும்; தங்கத்தில் முதலீடு என்பது ஆபத்துக் காலத்திற்கானது என்பதும் பொருளாதார வல்லுநர்களின் கூற்றாகும். இருந்தாலும் அதில் ஒரு சமநிலையை கண்டறிவது என்பது கடினமான ஒன்றாகவே இருந்துள்ளது.
அப்படியிருக்க, இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் வகையிலேயே Kwala Intel எனும் செயற்கை நுண்ணறிவு தளம் வந்திருக்கிறது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் (NYSE, Nasdaq) முதலீட்டாளர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த Kwala Intel தற்போது இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்காகவும் அறிமுகமாகி உள்ளது.
சிக்கலான, குழப்பத்தை அளிக்கும் வார்த்தைகளை அடுக்காமல், முதலீட்டாளர்களுக்கு மிக எளிய உரையாடலின் வாயிலாக துல்லியமான தரவுகளை வழங்கும் வகையில் இந்த Kwala Intel தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தங்கம் மற்றும் பங்குச்சந்தை முதலீடு குறித்து Kwala Intel தளத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து அந்த தளம் அளித்த பதிலை இங்கு விரிவாக காணலாம்.
Prompt: should one invest in the stock market right now or is gold a better option?
கேள்வி: "இப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதோ அல்லது தங்கத்தில் முதலீடு செய்வதோ?"
இந்த கேள்விக்கு சந்தையின் நிகழ்நேரத் தரவுகள் மற்றும் நிறுவனங்களின் மதிப்பீடுகளை (P/E Ratios) ஆய்வு செய்து Kwala Intel ஒரு தெளிவான விடையை அளித்துள்ளது.
65% இந்தியப் பங்குகள்: நீண்ட கால அடிப்படையில் அதிக செல்வத்தைப் பெருக்குவதற்கு (Wealth Creation) பங்குச்சந்தையே முதன்மையான வழியாகும். எனவே, முதலீட்டுத் தொகையில் பெரும்பகுதியை இந்தியப் பங்குகளில் ஒதுக்கலாம்.
35% தங்கம்: பங்குச்சந்தையில் ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சரிவுகளில் இருந்து போர்ட்ஃபோலியாவைப் பாதுகாக்கும் அரணாக தங்கம் செயல்படுகிறது.
முக்கிய பார்வை: இரண்டில் ஏதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்யாமல், 65:35 என்ற விகிதத்தில் இரண்டையும் கலந்து முதலீடு செய்வதே இக்காலகட்டத்திற்கு ஏற்ற புத்திசாலித்தனமான அணுகுமுறை என Kwala Intel பரிந்துரைக்கிறது.
எனவே, அடுத்த முறை உங்களுக்கு பங்குகள் சார்ந்தும், நிறுவனங்கள் சார்ந்தும் தகவல் தேவைப்பட்டாலோ, சந்தேகம் தேவைப்பட்டாலோ, நீங்கள் Kwala Intel AI (https://kwalaintel.com) தளத்தின் உதவியை நாடலாம்.