திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுதான் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பின்னர், லஞ்ச புகாரில் முன்னாள் அமைச்சர் கைதாவது இதுதான் முதல்முறை எனலாம்.
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அன்பில் மகேஷ் கைதாகி உள்ளார். இந்த வழக்கின் பின்னணி, வழக்கின் விசாரணை, இதில் அன்பில் மகேஷிற்கு உள்ள தொடர்பு, இன்றைய அவரது கைது, போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகாரில் அவருடைய பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
கைதானவர்கள் அளித்த வாக்குமூலங்கள், அரசு ஆவணங்கள், மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை அன்பில் மகேஷை நோக்கி விரிவடைந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் அவர் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், "ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேசத் தொடங்கியது. ஆளுநரின் அதிகாரத்தை தாடி, மீசை என ஒப்பீடு செய்தல்லவா..." என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது நடவடிக்கையைத் தவிர்க்க அன்பில் மகேஷ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
— Udhay (@Udhaystalin) October 26, 2026
#WATCH | Chennai, Tamil Nadu: Former Tamil Nadu School Education Minister and DMK leader Anbil Mahesh Poyyamozhi was brought to the Madras High Court to be presented before the Magistrate. He was arrested in connection with an alleged ₹100-crore private school approval scam. The case involves allegations that money was collected from private school managements by promising government approvals, permanent recognition, and permission to upgrade schools.
— ANI (@ANI) October 26, 2026
கைதான பின்னர் மருத்துவமனையில் சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம், ஏற்கெனவே 8 மணிநேர விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
முன்ஜாமீனை மறுப்பதற்கு அரசு தரப்பில் எப்போது சில வாதங்கள் முன்வைக்கப்படும். ஆனால், அந்த வாதங்கள் அனைத்தும் கட்டுக்கதையாகவே உள்ளன. இதை அவர்களால் நிரூபிக்க முடியாது. முன்ஜாமீன் கொடுத்ததும் கைது செய்ய வேண்டும் என்பதற்காக கைது செய்துள்ளனர்" என்றார்.