• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /Today Rasi Palan: இன்றைய ராசிபலன்.. மேஷம் முதல் மீனம் வரை எப்படி?

Today Rasi Palan: இன்றைய ராசிபலன்.. மேஷம் முதல் மீனம் வரை எப்படி?

Written ByR Balaji
Published: Oct 09, 2026, 06:12 AM IST|Updated: Oct 09, 2026, 06:18 AM IST
joinshare

Today Rasi Palan: இன்று (அக்டோபர் 09, வெள்ளிக்கிழமை) புராட்டாசி 22 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் இங்கே. 
 

Today Rasi Palan1/13

மேஷம்

உத்தியோகப் பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : மேன்மையான நாள். பரணி : உதவிகள் கிடைக்கும். கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பு மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும். ரோகிணி : இலக்குகள் பிறக்கும். மிருகசீரிஷம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
Today Rasi Palan3/13

மிதுனம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள். திருவாதிரை : பிரச்சனைகள் குறையும். புனர்பூசம் : குழப்பங்கள் விலகும்.
Today Rasi Palan4/13

கடகம்

பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிதானமான செயல்பாடுகள் எதிர்ப்புகளை குறைக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். தொழில்நுட்பக் கருவிகளில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம் புனர்பூசம் : சாதகமான நாள். பூசம் : எதிர்ப்புகள் குறையும். ஆயில்யம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பணிகளில் இருந்த இழுபறியான சூழல் மறையும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். மனை நிமித்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூரம் : புதுமையான நாள். உத்திரம் : மேன்மையான நாள்.
Today Rasi Palan6/13

கன்னி

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் உள்ள தடைகளை அறிவீர்கள். பொது வாழ்வில் மாறுபட்ட சூழல்கள் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் முழுமை இன்றி ஈடுபடுவீர்கள். குணநலன்களில் மாற்றம் காணப்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். அஸ்தம் : கவனம் வேண்டும். சித்திரை : மாற்றம் பிறக்கும்.
Today Rasi Palan7/13

துலாம்

எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடி ஏற்படலாம். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கலாம். புதுவிதமான பயணங்கள் மூலம் மாற்றங்களும் அனுபவங்களும் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் சித்திரை : வாய்ப்புகள் ஏற்படும். சுவாதி : ஆர்வம் ஏற்படும். விசாகம் : அனுபவங்கள் கிடைக்கும்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைக்கூடும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் விசாகம் : குழப்பம் விலகும். அனுஷம் : மகிழ்ச்சியான நாள். கேட்டை : ஆரோக்கியம் மேம்படும்.
Today Rasi Palan9/13

தனுசு

வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பொருளாதார விஷயங்களில் ஏற்ற இறக்கமான சூழல் காணப்படும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்களின் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மனத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மூலம் : ஒத்துழைப்பான நாள். பூராடம் : மாற்றங்கள் பிறக்கும். உத்திராடம் : குழப்பம் நீங்கும்.
Today Rasi Palan10/13

மகரம்

மனதில் இருந்த குழப்பங்கள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறுதூரப் பயணங்களால் மனதில் தெளிவுகள் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திராடம் : குழப்பங்கள் குறையும். திருவோணம் : தெளிவுகள் ஏற்படும். அவிட்டம் : தேடல்கள் அதிகரிக்கும்.
Today Rasi Palan11/13

கும்பம்

நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்கள் மூலம் உடல் சோர்வு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அவிட்டம் : தாமதமான நாள். சதயம் : விவேகத்துடன் செயல்படவும். பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
Today Rasi Palan12/13

மீனம்

மனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும். உத்திரட்டாதி : ஒத்துழைப்பான நாள். ரேவதி : அறிமுகம் உண்டாகும்.
Today Rasi Palan13/13

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

2

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

3

விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

4

CM விஜய்க்கு முக்கியமான தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் காலை 8 மணிக்கு கவுன்டிங்

5

இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் மீண்டும் சீண்டல்... முழு பின்னணி

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.