• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இன்றைய ராசிபலன் (02-09-2026): மேஷம் முதல் மீனம் வரை.. யார் யாருக்கு எப்படி?

இன்றைய ராசிபலன் (02-09-2026): மேஷம் முதல் மீனம் வரை.. யார் யாருக்கு எப்படி?

Written ByR Balaji
Published: Sep 02, 2026, 06:01 IST|Updated: Sep 02, 2026, 06:08 IST
joinshare

Today Rasi Palan September 02: இன்று (செப்டம்பர் 02) புதன்கிழமை ஆவணி 16 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசி பலன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.  
 

Today Rasi Palan1/13

மேஷம்

முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனை மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் அஸ்வினி : சிந்தித்து செயல்படவும். பரணி : அனுசரித்துச் செல்லவும். கிருத்திகை : பொறுமை வேண்டும்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகள் இடத்தில் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும். ரோகிணி : நிதானம் வேண்டும். மிருகசீரிஷம் : வாதங்கள் நீங்கும்.
Today Rasi Palan3/13

மிதுனம்

கால்நடை வளர்ப்புத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். துறைகளில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : லாபகரமான நாள். திருவாதிரை : முன்னேற்றமான நாள். புனர்பூசம் : ஒத்துழைப்பான நாள்.
Today Rasi Palan4/13

கடகம்

மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். வேளாண்மைத் துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சேவைப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய ஆதரவு கிடைக்கும். வெளியுலக அனுபவம் மூலம் மாற்றங்கள் உருவாகும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூசம் : ஈடுபாடுகள் அதிகரிக்கும். ஆயில்யம் : மாற்றங்கள் உருவாகும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம் மகம் : சிந்தனைகள் மேம்படும். பூரம் : தன்னம்பிக்கை மேம்படும். உத்திரம் : சாதகமான நாள்.
Today Rasi Palan6/13

கன்னி

பழைய சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். தன வரவுகளில் இழுபறியான சூழல் அமையும். செய்யும் காரியத்தில் கவனம் வேண்டும். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திரம் : குழப்பங்கள் ஏற்படும். அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும். சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
Today Rasi Palan7/13

துலாம்

குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த சில குழப்பங்கள் மறையும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் சித்திரை : சாதகமான நாள். சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும். விசாகம் : குழப்பம் மறையும்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் சற்று குறையும். வழக்கு விஷயத்தில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் விசாகம் : பிரச்சனைகள் குறையும். அனுஷம் : ஆதாயகரமான நாள். கேட்டை : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
Today Rasi Palan9/13

தனுசு

புது விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தான, தர்மக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் மூலம் : ஆர்வம் அதிகரிக்கும். பூராடம் : உதவிகள் கிடைக்கும். உத்திராடம் : குழப்பம் விலகும்.
Today Rasi Palan10/13

மகரம்

நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல்கள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உருவாக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திராடம் : புரிதல்கள் அதிகரிக்கும். திருவோணம் : ஆர்வமின்மை குறையும். அவிட்டம் : அனுகூலமான நாள்.
Today Rasi Palan11/13

கும்பம்

சிறு தூரப் பயணம் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனை விருத்தி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் கவனம் வேண்டும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் அவிட்டம் : மாற்றம் பிறக்கும். சதயம் : சிந்தனைகள் மேம்படும். பூரட்டாதி : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
Today Rasi Palan12/13

மீனம்

வியாபாரப் பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயம் மேம்படும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும். ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.
Today Rasi Palan13/13

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.