• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /இன்றைய ராசிபலன்(செப்டம்பர் 18): மேஷம் முதல் மீனம் வரை.. யார் யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய ராசிபலன்(செப்டம்பர் 18): மேஷம் முதல் மீனம் வரை.. யார் யாருக்கு அதிர்ஷ்டம்?

Written ByR Balaji
Published: Sep 18, 2026, 06:01 IST|Updated: Sep 18, 2026, 06:08 IST
joinshare

Today Rasi Palan September 18: இன்று (செப்டம்பர் 18 - வெள்ளிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு பணவரவு, தெழில் மற்றும் உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். அதே நேரத்தில், சிலருக்கு செலவுகள், பணிச்சுமை மற்றும் மனக்குழப்பம் போன்ற சூழல்கள் உருவாக வாய்ப்புள்ளது. அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். 
 

Today Rasi Palan1/13

மேஷம்

குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். வாக்குறுதிகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு நிறம் அஸ்வினி : நெருக்கடிகள் ஏற்படும். பரணி : புரிதல்கள் அதிகரிக்கும். கிருத்திகை : ஆர்வமின்மையான நாள்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மனதிற்கு நம்பிக்கையை தரும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். பயனற்ற செலவுகளை தவிர்ப்பீர்கள். வியாபாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் கிருத்திகை : தேடல்கள் ஏற்படும். ரோகிணி : புரிதல்கள் ஏற்படும். மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
Today Rasi Palan3/13

மிதுனம்

கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் நிமித்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து பணிகளில் புதுமையான சூழல் அமையும். சிறு மற்றும் குறுந்தொழிலில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும். புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
Today Rasi Palan4/13

கடகம்

எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தடைகள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறுதூரப் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் வழியில் புதிய வாய்ப்புகள் உருவாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : தடைகள் மறையும். பூசம் : மாற்றமான நாள். ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உருவாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதமும் விவேகமும் வெளிப்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் மகம் : முன்னேற்றமான நாள். பூரம் : விருப்பம் நிறைவேறும். உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
Today Rasi Palan6/13

கன்னி

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசு காரியத்தில் பொறுமை வேண்டும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். பணி தொடர்பான மனக்குழப்பங்கள் உண்டாகும். சிறு வியாபாரம் தொடர்பான விஷயங்களில் காரிய வெற்றி ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் உத்திரம் : புரிதல் மேம்படும். அஸ்தம் : பொறுமை வேண்டும். சித்திரை : வெற்றிகரமான நாள்.
Today Rasi Palan7/13

துலாம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்து வந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீகம் தொடர்பான சொத்துக்களில் தீர்வுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் சித்திரை : ஆதாயம் உண்டாகும். சுவாதி : திறமைகள் வெளிப்படும். விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

தேக ஆரோக்கியத்தில் பொலிவு கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் விசாகம் : பொலிவு கூடும். அனுஷம் : அனுசரித்து செல்லவும். கேட்டை : பொறுமை வேண்டும்.
Today Rasi Palan9/13

தனுசு

மறைமுக வருமானங்கள் சிலருக்கு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நம்பிக்கையை உருவாக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் மூலம் : வாய்ப்புகள் ஏற்படும். பூராடம் : நம்பிக்கை மேம்படும். உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
Today Rasi Palan10/13

மகரம்

தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மகிழ்ச்சியான நினைவுகள் மூலம் மன அமைதி உருவாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும். திருவோணம் : வதந்திகள் நீங்கும். அவிட்டம் : அமைதியான நாள்.
Today Rasi Palan11/13

கும்பம்

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மனதில் மேம்படும். பயணத்தின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் குறையும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் அவிட்டம் : சாதகமான நாள். சதயம் : சிந்தனைகள் மேம்படும். பூரட்டாதி : குழப்பம் குறையும்.
Today Rasi Palan12/13

மீனம்

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். வியாபார விருத்தி சார்ந்த முயற்சிகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் பூரட்டாதி : செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி : ஏற்ற இறக்கமான நாள். ரேவதி : விருத்தியான நாள்.
Today Rasi Palan13/13

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

Budhan Nakshatra Peyarchi: விசாக நட்சத்திரத்திற்கு மாறிய புதன்.. இன்று முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

2

IPL 2027 Auction: பென் ஸ்டோக்ஸுக்கு அனுமதி.. ஹாரி புரூக்கிற்கு மட்டும் ஏன் தடை? பிசிசிஐ சொல்வது என்ன?

3

Explained : வாக்காளர்களின் தேவையை எளிமையாக்கிய 18 வயது ஹேக்கர்! SIR லிஸ்டை சரிபார்ப்பது ஈசி..

4

பஞ்சாபை குறிவைக்கும் பாஜக... என்ன செய்யப்போகுது காங்கிரஸ்? - நிலவரம் இதோ

5

Miss Universe 2026 : மிஸ் யுனிவர்ஸை மிஸ் செய்த கேரள பெண்! புவேர்ட்டோ ரிக்கா பெண் வெற்றி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.