இன்றைய ராசிபலன் செப்டம்பர் 23: 12 ராசிக்காரர்களுக்கும் தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் உறவுகள் தொடர்பான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
1/13
மேஷம்
சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அனுபவம் ஏற்படும்.
பரணி : பொறுப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவான நாள்.
2/13
ரிஷபம்
வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். எதையும் தன்னம்பிக்கையோடு அணுகி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : தேடல் உண்டாகும்.
ரோகிணி : முடிவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.
3/13
மிதுனம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை : விவேகத்துடன் செயல்படவும்.
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
4/13
கடகம்
குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவுகள் அமையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
5/13
சிம்மம்
புதுவிதமான கண்ணோட்டங்கள் மூலம் மாற்றங்கள் காணப்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். மனதில் புதிய ஆசைகள் மற்றும் விருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். கணவன்-மனைவியிடையே புரிதல்கள் ஏற்படும். வேலைக்காரர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : மாற்றங்கள் பிறக்கும்.
பூரம் : வரவு உண்டாகும்.
உத்திரம் : அனுபவங்கள் உண்டாகும்.
6/13
கன்னி
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
உத்திரம் : புரிதல் உண்டாகும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
7/13
துலாம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை விஷயங்களில் மேன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சுவாதி : அத்தியாயம் பிறக்கும்.
விசாகம் : மேன்மை ஏற்படும்.
8/13
விருச்சிகம்
சுபகாரிய நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். சிறுதூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய முயற்சிகளில் இருந்து தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில்நுட்பக் கருவிகளால் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
9/13
தனுசு
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் நிமித்தமான பயணங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
மூலம் : பயணங்கள் ஏற்படும்.
பூராடம் : முதலீடுகள் மேம்படும்.
உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
10/13
மகரம்
உறவுகளுக்குள் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
திருவோணம் : குழப்பமான நாள்.
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
11/13
கும்பம்
விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : ஆலோசனை கிடைக்கும்.
பூரட்டாதி : விட்டுக் கொடுத்து செயல்படவும்.
12/13
மீனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். சொத்து சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
பூரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.
13/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.