• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /2026ல் தமிழ் சினிமாவை காப்பாற்றிய டாப் 5 படங்கள்! ஜெயிலர் 2 to சீன்..முழு லிஸ்ட்

2026ல் தமிழ் சினிமாவை காப்பாற்றிய டாப் 5 படங்கள்! ஜெயிலர் 2 to சீன்..முழு லிஸ்ட்

Written ByYuvashree M
Published: Nov 29, 2026, 14:18 IST|Updated: Nov 29, 2026, 14:31 IST
joinshare
வசூல் ரீதியாக, தமிழ் சினிமாவை இந்த வருடம் காப்பாற்றிய படங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை, பல்வேறு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி விட்டன. ஆனால், இந்த படங்கள் யாவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றவையாக இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா..?

First Place Goes to Jailer 21/5

முதல் இடத்தில் ஜெயிலர் 2

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்திருந்த திரைப்படம் ஜெயிலர் 2. இந்த படத்தில் ரித்திக் ரோஷன், ஜாக்கி ஷ்ராப், மோகன் லால், சுராஜ், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் கேமியோவில் நடித்திருந்தனர். இப்படம், கிட்டத்தட்ட சுமார் ரூ.836 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல, இப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த வசூலை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Karuppu in Second Place2/5

இரண்டாவது இடத்தில் கருப்பு

இரண்டாவது இடத்தில் கருப்பு படம் உள்ளது. இப்படம், கடந்த மே மாதம் வெளியாகி, பலத்த வரவேற்பினை பெற்றது. இப்படத்தினை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார். இப்படம் சுமார் ரூ.310 கோடி வரை வசூலித்ததாக தகவல் வெளியானது. பல தோல்விகளுக்கு பிறகு இது சூர்யாவின் மிகப்பெரிய கம்-பேக் ஆக பார்க்கப்பட்டது.
Jana Nayagan in Third Place3/5

மூன்றாவது இடத்தில் ஜனநாயகன்

முதல்வர் விஜய் நடித்த கடைசி படம், ஜனநாயகன். இந்த படம், உலகளவில் ரூ.324 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ வசூல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Scene in 4th Place4/5

நான்காவது இடத்தில் சீன்

சீன் திரைப்படம் சூர்யா நடிப்பில், ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவான படமாகும். இந்த படத்தில், சூர்யா பல ஆண்டுகளுக்கு பின் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படம், சுமார் ரூ.268.14 கோடிக்கும் மேல் வசூலை பெற்றது. விரைவில் இப்படம் ஓடிடியிலும் வெளியாக உள்ளது.
Vishwanath And Sons in 5th Place5/5

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்க்கு 5வது இடம்

இந்த லிஸ்டில் கடைசியாக இருக்கும் படம்தான், விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். மமிதா பைஜு ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம், தென்னிந்தியாவில் பலரின் கவனம் ஈர்த்த படமாக இருக்கிறது. இப்படம், உலகளவில் ரூ.212 கோடிக்கும் மேல் வசூலித்த படமாகும். குறிப்பு : 2026ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவை காப்பாற்றிய படங்கள் இதுதான் என்று மூத்த திரைப்பட விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கொடுத்த தகவலின் பேரில், இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

2

டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

3

Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained

4

”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

5

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்... போராடி மீட்ட லைப்கார்டு வீரர்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.